07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 17, 2007

சாகரன் வாயிலாய் அறிமுகமான பதிவுகள்

முதன்முதலில் நான் வலைப்பதிய தொடங்கிய போது, எனக்குத் தமிழ்மணம் மட்டுமே அறிமுகமாயிருந்தது. 'தேன்கூடு போட்டி..போட்டி' என்று மாற்றி மாற்றி பதிவுகள் வரவே, தேன்கூடும் அறிமுகமானது. மாதாமாதம் ஒரு தலைப்பு கொடுத்து, தலைப்புக்கு கதை கவிதை கட்டுரைகளை, பதிவர்களை எழுதத் தூண்டியது, தேன்கூட்டின் சிறப்பம்சம்.

ஒரு வகையில், அது வலைஞர்களை ஒன்றிணைத்தது என்றால், மிகையில்லை. என்ன எழுத என்று ஏங்கிக் கொண்டிருந்த என்போன்ற பலருக்கு தேன்கூடு போட்டி, கற்பனைக் கதவைத் திறந்துவிட்டது. வாராந்திர, மாதாந்திர பத்திரிக்கைகளில் மட்டுமே, கதை படித்துக் கொண்டிருந்தவர்களை, எழுதவும், படிக்கவும் தூண்டிய இனிமையான போட்டி அது.

அந்தப் போட்டியில் என்னைக் கவர்ந்த கதைகள் என்றால், ஒரு பெரிய பட்டியலே போடலாம். இளவஞ்சியாரின் 'விட்டில் பூச்சிகள்' , அருள் குமாரின் 'பெரிய மனுசன்' , கெளதமின் 'ஒரு நண்பனின் நிஜம்', வினையூக்கியின் 'அவள்', கடல்கணேசனின் 'ஓர் இரவில்..தீபாவை மீட்க'
போட்டிகளில் ஆக்கங்களை அள்ளிப்படைத்த வசந்தின் 'வாசம்', ஷைலஜா வின் 'ஒன்றா..இரண்டா..இலவசம்', மயூரேசனின் ' யாருக்கு இலவசம்', எனது 'வலைப்பூ..தலைப்பூ..வாழப்பூ', பேடுநியூஸிந்தியாவின், 'லாட்டரி கோவிந்தன்', சரவ்-வின் 'திருமணம் 1.0', அரைபிளேடின் 'கல்யாணராமனுக்கு லவ் மேரேஜு', முத்துவின் 'டன் டன் டன் டகா' என அடுக்கிக் கொண்டே போகலாம்.

தேன்கூடு போட்டி வலையில் கூட்டிய சுவாரஸ்யம், மறக்க முடியாத ஒன்று. அவர் வழியைப் பின்பற்றி, சர்வேசனும் ஒரு கதைப்போட்டி வச்சிருக்காரு. உங்களுக்கும் கதை எழுத ஆர்வமிருந்தா, நீங்களும் இந்த சுவாரஸ்யத்தில கலந்துக்கலாம்.

இப்ப உங்களுக்கு சில கதை வலைப்பூக்கள் அறிமுகமாயிருக்கும், அடுத்த அறிமுகத்துக்கு காத்திருங்க..

5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. அன்புடன் ஆண்டு விழா கவிதைப் போட்டிக்கான சுட்டிகளும் இங்கேயிருந்தால் பொருத்தமாயிருக்கும் என்று என் முந்தைய பின்னூட்டத்தில் இணைத்திருக்கிறேன். (HTML-இல் கொஞ்சம் weak.. அதான் முந்தைய பின்னூட்டத்தை இன்னும் தெளிவாக இடவில்லை.. கண்டுக்காதீங்க :-))

    ReplyDelete
  3. மிஸ்ஸாகிப் போன சில படைப்புகளை நினைவு படுத்தும் விதமாகக் கொடுத்தமைக்கு நன்றி சிவா!

    ReplyDelete
  4. நன்றி பாலா & அரசியாரே..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது