07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 28, 2007

புதிய கீதை


=====================================================
புதிய கீதை

எது கிடைத்ததோ
அது நன்றாகவே கிடைத்தது
எது கிடைக்கவில்லையோ
அது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை!
எது கிடைக்க வேண்டுமோ
அது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும்

எதை நீ கேட்காமலிருந்தாய்?
உன் நோக்கப்படி கிடைப்பதற்கு?
எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்?
அது நியாமாகக் கிடைப்பதற்கு?

எது இன்று கிடைத்ததோ
அது நாளையே உனக்கு அலுத்து விடும்
அடுத்த நாள் உனக்கு
அது வெறுத்து விடும்!

கிடைப்பதன் அருமை
அது கிடைக்கும் நொடி வரைதான்
அடுத்த நொடி
நீ வேறொன்றிற்கு ஆசைப் படுவாய்!

ஆகவே கேட்காம்ல் இரு!
இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படு!

இதுவே கிடைப்பதின் நியதியும்
பெறுவதின் சாரம்சமும் ஆகும்!

சம்பவாமி யுகே! யுகே!
=====================================================

விடைபெறும் நேரம் வந்து விட்டது!

இந்த புதிய கீதை எனக்காக நானே எழுதி வைத்துள்ளது!

வலைச்சரம் இணைய இதழின்
ஒரு வார ஆசிரியர் வேலை
நான் கேட்காமலேயே வந்தது
கிடைத்ததைக் கொண்டு
ஒரு வாரம் சந்தோஷ்மாக இருந்தேன்!
இப்போது விடை பெறுகிறேன்!


நன்றி
வணக்கம்!
அன்புடன்
SP.VR சுப்பையா
--------------------------------------------------------------------------
வாய்ப்புக் கொடுத்த வலைச்சரம் (அதிபர்:-))
நண்பர் சிந்தாநதி அவர்களுக்கும்
ஒத்துழைத்த
என் இனிய வலைப் பதிவு நண்பர்களுக்கும்
ம்ற்றும் என் வகுப்ப்றைக் கண்மணிகளுக்கும்
என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

10 comments:

  1. நன்றி ஐயா

    கலகலப்பான வாரம்.

    நான் அதிபர் எல்லாம் இல்லை. வலைச்சர ஒருங்கிணைப்பாளர் அவ்வளவுதான்.

    ReplyDelete
  2. ///சிந்தாநதி அவர்கள் சொல்லியது:
    கலகலப்பான வாரம்.///

    வெறும் கலகலப்பு மட்டும்தானா?
    உப்யோகமமன பதிவு எதுவும் இல்லையா?:-)))))))))

    ReplyDelete
  3. விளக்கமாக அடுத்த பதிவில் விமர்சிக்கிறேன். இப்போதைக்கு சாம்பிள். ;)

    ReplyDelete
  4. அருமையான புதிய கீதை, ஐயா!!

    கலக்கலாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. மிக்க நன்றி!

    ReplyDelete
  5. அட! ஒரு வாரம் அதுக்குள்ளே ஓடிருச்சா?

    உங்க (அசுர) உழைப்பு அபாரம்.

    மனமார்ந்த பாராட்டு(க்)கள்.

    வழக்கம்போல இந்தப் படமும் அருமை. இங்கே எங்க ஹரே கிருஷ்ணா கோயிலில் இருக்கு இந்தப் படம்.

    அப்புறம் தவறா நினைக்கலைன்னா ஒரு சந்தேகம் வாத்தியார் ஐயா.

    உங்க கீதையில்

    //கடைத்ததைக் கொண்டு...//

    இது 'கிடை'த்ததைக் கொண்டுன்னு இருக்கணுமா? இல்லே 'கடை'பரத்தியதால் கடைத்ததையா?

    ReplyDelete
  6. ////சிந்தாநதி said... விளக்கமாக அடுத்த பதிவில் விமர்சிக்கிறேன்.
    இப்போதைக்கு சாம்பிள். /////

    அடுத்த பதிவு பார்த்தேன். பாராட்டுகளுக்கு நன்றி!
    என்னைப் பாராட்டியதற்கு மட்டுமல்ல - என் வகுப்பறை
    மாணாக்கர்களப் பாராட்டியதற்கும் சேர்த்து!

    ReplyDelete
  7. /////தென்றல் said...
    அருமையான புதிய கீதை, ஐயா!!
    கலக்கலாகவும், மிகவும் பயனுள்ளதாக
    வும் இருந்தது. மிக்க நன்றி!///

    இங்கே படித்ததையெல்லாம் மனதில் ஏற்றிவைத்துக் கொள்ளுங்கள்
    மந்த்லி டெஸ்ட்டில் கேள்விகள் வரும்!

    ReplyDelete
  8. ////// துளசி கோபால் said... அட! ஒரு வாரம் அதுக்குள்ளே ஓடிருச்சா?

    உங்க (அசுர) உழைப்பு அபாரம்.மனமார்ந்த பாராட்டு(க்)கள்./////

    நன்றி சகோதரி! தமிழ்மணத்தில் எழுதுவதால் கிட்டும் ஒரு நல்ல பலன்
    இந்த மாதிரிப் பாராட்டுக்கள்தான்!
    அதுதான் அடிக்கடி எழுதவைக்கிறது!

    /////இது 'கிடை'த்ததைக் கொண்டுன்னு இருக்கணுமா?
    இல்லே 'கடை'பரத்தியதால் கடைத்ததையா?///

    அது தட்டச்சுப்பிழை சகோதரி. திருத்திவிட்டேன்
    சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

    ReplyDelete
  9. //SP.VR. சுப்பையா said...
    ////சிந்தாநதி said... விளக்கமாக அடுத்த பதிவில் விமர்சிக்கிறேன்.
    இப்போதைக்கு சாம்பிள். /////

    அடுத்த பதிவு பார்த்தேன். பாராட்டுகளுக்கு நன்றி!
    என்னைப் பாராட்டியதற்கு மட்டுமல்ல - என் வகுப்பறை
    மாணாக்கர்களப் பாராட்டியதற்கும் சேர்த்து! //

    இதுதான் வாத்தியார் மனசு..! :)

    சென்ஷி

    ReplyDelete
  10. /மந்த்லி டெஸ்ட்டில் கேள்விகள் வரும்!
    /

    மந்த்லி டெஸ்ட்-னு சொன்னவுடனே மறந்து போயி...டு..ச்..சி..ங்..க..ய்..யா..
    ;(

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது