07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 22, 2007

சுட்டிச்சுட்டி ஒரு வாரம் ஓடிடுச்சு!

சடுதியில் 21-ஆம் தேதி வந்துவிட்டது. நாட்கள் நகருவது ஒலியின் வேகத்தைவிட அதிகமாயிருப்பது போல் தோன்றுகிறது. அதுவும், இணையத்தில் உட்கார்ந்து, வலைப்பூக்களை சுற்றிச் சுற்றி வந்தால், பொழுது போவதே தெரியாது. பூமிப்பந்தை சுருட்டி இணையத்தில் ஓட விட்டது போல், எல்லாவித தகவல்களும் கிட்டுகிறது.

இன்றோடு என் சுட்டுதலை முடிக்க வேண்டும், அடுத்த ஆசிரியர், அதிரடியாய் வந்து கொண்டிருப்பார், அதற்குள் இன்னொரு ஆட்டம் ஆடிரலாமா?

புதுசா வலைப்பதிவு ஆரம்பிக்கிறவங்களுக்கு டெக்னிகலா சில சமாசாரங்கள் புரியாது. அதெல்லாம் தெளிவு படுத்தவும், புதியதகவல்கள் தரவும் நிறைய மக்கள் பதிவுகள் பதிஞ்சிருக்காங்க.

ரவிசங்கர், வலைப்பதிவில் பாடலை எப்படிப் பதிவது குறித்துச் சொல்லியிருக்கிறார், பாருங்க.

தமிழ்ப்பித்தனும், நிறைய தகவல்களைத் தருகிறார், பாட்காஸ்ட் எனப்படக்கூடிய வலைஒலிபரப்பினைக் குறித்த தகவல்கள் படிக்கச் சுவை.

புதிய ப்ளாக்கருக்கு மாறிய பிறகு, பழைய பின்னூட்டங்களில் தெரிந்த பூச்சியை விரட்டிய கோபியின் பதிவுகள், 'ஜெகத்'தோட பதிவுகளப் படிச்சா, இன்னும் பல புதுமைகள் புரியும்.

சின்னக்குட்டியோட வீடியோ தளமும், சிறந்த பொழுதுபோக்குக்கு உதவும், கமலோட பேட்டி, இதன் மூலமாகத்தான் பார்த்தேன். நாம தேடிப் போய், இந்த மாதிரி வீடியோவைக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை, இவரோட தளத்த அப்பப்ப பார்த்தாலே போதும்!

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம், நாளுக்கு நாள் வளர்கிற வலையுலகில், பதிவுகளுக்கு என்றும் பஞ்சமிருக்காது. நிறைய புதிய பதிவர்கள் தினமும் வருகிறார்கள், துவக்கத்தில் இருக்கின்ற ஆர்வம், போகப்போக காணாமல் போய்விடுகிறது. எல்லா வலைப்பதிவுகளும், எல்லா நேரமும், உபயோகமாய் செய்தி தந்து கொண்டிருக்கமுடியாது, நிறைய வலைஞர்கள், நாட்குறிப்பு போல பயன்படுத்துகிறார்கள். அது போல் செய்தால் கூட, வலைப்பதிவுகளை இடைவெளிவிடாமல் பதிவுகளைத் தரலாம்.

எப்படியோ எல்லோரும் ரசிக்கும் விதமாய், பதிவுகள் பதியப் படட்டும்.

கிடைத்த வாய்ப்பில், நான் கண்ட வலைப்பதிவுகளை உங்கள் சுவாரஸ்யத்திற்கும், பகிர்ந்திருக்கிறேன். சிந்தாவுக்கு நன்றியுடன்..உங்களுக்கும் நன்றி சொல்லி, வலைச்சரத்திலிருந்து விடைபெறுகிறேன்!

நட்புடன்..
நெல்லை சிவா.

1 comment:

தமிழ் மணத்தில் - தற்பொழுது