07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 27, 2007

அது ஒரு தனி உலகம்

அது ஒரு தனி உலகம்!

உலகம் என்பது ஒன்றுதானே - அதில் எப்படித் தனி
உலகம் என்று ஒரு பிரிவு வரும் என்று கேட்பவர்களுக்கு,
ஒரு வார்த்தை!

உலகம் ஒன்றல்ல!

குழந்தைக உலகம் தனி They are living in a momentary life
அவரகள் அந்தக் கணநேரத்தில் வாழ்கிறவர்கள்
அதுபோல பெண்கள் உலகம், இளைஞர்கள்
உலகம், 'குடி' மக்கள் உலகம், வயதானவர்கள்
உலகம் என்று பலவகை உலகங்கள் இருக்கின்றன!

அந்தந்த உலகத்தின் முழுமை அதிலே உள்ளவர்
களுக்கும், அதில் சுய அனுபவப் பட்டவர்களுக்கும்
மட்டும்தான் தெரியும்!

கவிதை உலகம் என்பது சிறப்பானது!

கவிதை உலகம்தான் நம்மை மெய்மறக்கச்
செய்வது!

அதிலேயே உழல்பவர்களுக்கும், உணர்ந்தவர்களுக்கும்
தான் அது பிடிபடும்!

எனக்குப் பல கவிஞர்கள் நண்பர்களாக உள்ளார்கள்
பட்டியல் இட்டால் இருபது கவிஞர்களுக்குமேல் தேறும்

அதுபோல பல கவிஞர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன்
கவியரசர் கண்ணதாசன் அவர்களை இருமுறை சந்தித்துப்
பேசியிருக்கிறேன். கவிஞர் வைரமுத்து அவர்களையும்,
கவிஞர் மேத்தா அவர்களையும் சந்தித்திருக்கிறேன்.

அவர்களெல்லாம் அற்புதமான கவிஞர்கள். அவர்களுடைய
பல பாடல் வரிகள் என் மனதிற்குள் குடியிருக்கின்றன!

இந்தப் பதிவில் என்னுடைய நெருங்கிய நண்பரும்,
எங்கள் பகுதியைச் சேர்ந்தவருமான கவித்தென்றல்
திரு. காசு. மணியன் அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த
விரும்புகிறேன்

அவரைப் பற்றிய விவரங்களை முழுமையாக எழுதி நான்
முன்பு (23.09.2007) பதிந்த பதிவின் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்
அதில் அவர் எழுதிய அசத்தலான பல கவிதை வரிகள் உள்ளன
அவரைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் உள்ளன!
அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன்

சிலர் படித்திருக்கலாம். சிலர் கண்களில் படாமல் பதிவு
மறைந்திருக்கலாம். ஆகவே மீண்டும் ஒருமுறை அனைவரும்
படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தப் பதிவின்
சுட்டியை உங்களுக்குத் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்

"நெஞ்சத்தில் கருவுற்றால் நிமிடத்தில் பெற்றெடுப்பான்"
என்று கவியரசர் கண்ணதாசன் அவர்களால்

பாராட்டுக்களைப் பெற்றவர் அவர்.

அதைவிட அவருக்கு வேறு பெருமை என்ன வேண்டும்?

சுட்டி இங்கே உள்ளது!

=======================================================


11.3.2007 அன்று சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு
விழா ஒன்றில் மாண்புமிகு மத்திய நிதியமைச்சர்

திரு.ப.சிதம்பரம் அவர்களுடன் கவித்தென்றல் காசு.மணியன்

==========================================================

2.6.2006ல் நடைபெற்ற ( நான் எங்கள் ஊரைப்பற்றித் தொகுத்து
வெளியிட்ட) புத்தக வெளியீட்டு விழாவில்
உச்ச நீதிமன்ற நீதியரசர் டாக்டர்.திரு.AR. லெட்சுமணன்
அவர்களுடன் கவித்தென்றல் காசு.மணியன்.
படத்தில் இடது ஓரம் நான் நிற்கின்றேன்.


கவிஞர் திரு.வைரமுத்து அவர்களுடன் திரு.காசு. மணியன அவர்களும் நானும். இடது ஓரம் திரு.காசு மணியன் அவர்கள். வலது ஓரம் கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் திரு. வேலாயுதம் அவர்கள்

=============================================================


கவிஞர் திரு.மேத்தா அவர்களுடன் திரு.காசு. மணியன்

========================================================


திரு.மு.மேத்தா அவர்களுடன் அடியவன்


கவித்தென்றல் காசு.மணியன் அவர்களும் நானும்!
என்னுடைய மேடைச் சொற்பொழிவு ஒன்றின் முடிவில்
அவர் எனக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தபோது
எடுத்த படம்

==========================================================

அன்புடன்,

SP.VR.சுப்பையா,

இந்தவார ஆசிரியர்,

வலைச்சரம் - இணையத் தமிழ் இதழ்

---------------------------------------------------



14 comments:

  1. அப்பாடி,,,

    இன்னைக்குத்தான் வாத்தியார் பாடத்துக்கு முதல் ஆளா அட்டண்டஸ் கொடுக்கறேன்.

    சென்ஷி

    ReplyDelete
  2. அதிலேயே உழல்பவர்களுக்கும், உணர்ந்தவர்களுக்கும்
    தான் அது பிடிபடும்!

    மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள் ஐயா.
    என் மண்டைக்குள் இந்த கவிதை சரியாக ஏற மறுக்கிறது,
    நீங்கெல்லாம் அனுபவிங்க.
    வயதில் சிறியவன் நான் எப்படி திரு.காசு.மணியன் அவர்களுக்கு வாழ்த்து சொல்வது.
    இதைப்படித்தேன் என்று மட்டும் சொல்லிவிடுங்கள்.
    நன்றி

    ReplyDelete
  3. /இன்னைக்குத்தான் வாத்தியார் பாடத்துக்கு முதல் ஆளா அட்டண்டஸ் கொடுக்கறேன்.
    //

    I am 3rd :)

    ReplyDelete
  4. வ்ருகைப் பதிவேடு இருக்கட்டும்!
    கரும்பலகையில் எழுதி வைத்துள்ளதைப் படித்தீர்களா?

    ReplyDelete
  5. //SP.VR. சுப்பையா said...

    வ்ருகைப் பதிவேடு இருக்கட்டும்!
    கரும்பலகையில் எழுதி வைத்துள்ளதைப் படித்தீர்களா?/

    ???????

    சென்ஷி

    ReplyDelete
  6. வாத்தியார் ஐயா,

    உங்களை நேரில் பார்த்தவன் என்பதால் இந்த புகைப்படங்கள் எனக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

    ReplyDelete
  7. பாடம் நடத்திக் கொண்டிருந்த வாத்தியார் ஒருவர்
    தன் மாணவனைப் பார்த்து (பாடம்) " நுழைழந்ததா?" என்று கேட்க,
    அதே சமயம் பாடத்தைக் கவனிக்காமல் மேற்கூரையில்
    இருந்த ஓட்டை வழியாகத் தப்பிக்க முயன்ற எலி ஒன்றைப்
    பார்த்துக் கொண்டிருந்த மாணவன் சொன்னான்
    " சார் வால் மட்டும் பாக்கி, மற்றெதெல்லாம் நுழைந்து விட்டது"

    இப்படித்தான் இருக்கிறார்கள் என் வகுப்பு மாணவர்கள்!

    உள்ளே வந்த 3 பேர்களில் இரண்டுபேர் அட்டெண்டன்ஸ் மட்டும்
    கொடுத்துவிட்டுப் போவதில் முனைப்பாக இருக்கிறார்கள்
    மற்றொருவர் படங்களை மட்டும் பார்த்துவிட்டுப் போகப் பார்க்கின்றார்

    பாடத்தை (பதிவை) யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை!

    இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு, இந்தியா எப்படி வல்லரசாகும்?

    ReplyDelete
  8. //இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு, இந்தியா எப்படி வல்லரசாகும்?//

    இப்படியெல்லாம் சொல்லி குடியரசு தலைவர் கலாமை படுக்கையில் கிடத்திடாதிங்க !
    :)))))))))

    ReplyDelete
  9. //இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு, இந்தியா எப்படி வல்லரசாகும்?//

    இப்படியெல்லாம் சொல்லி குடியரசு தலைவர் கலாமை படுக்கையில் கிடத்திடாதிங்க !
    :)))))))))

    ReplyDelete
  10. ///வடுவூரார் சொல்லியது: வயதில் சிறியவன் நான் எப்படி திரு.காசு.மணியன் அவர்களுக்கு வாழ்த்து சொல்வது.
    இதைப்படித்தேன் என்று மட்டும் சொல்லிவிடுங்கள்.///

    ரசிப்பதற்கு வயதுத் தடையில்லை!
    மனம்தான் வேண்டும்
    வாழ்த்துவதற்கும் அப்படித்தான்!

    /// கோவியார் சொல்லியது: இப்படியெல்லாம் சொல்லி குடியரசு தலைவர் கலாமை படுக்கையில் கிடத்திடாதிங்க !
    :))))))))) ///

    அதானல்தான அவ்ர் பயந்து இரண்டாவ்து முறையாக ஜனாதிபதி
    பதவி தன்க்கு வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டார்!:-)))

    ReplyDelete
  11. வலைச்சரம் பதிவில் பதிவுகளை அறிமுகப்படுத்துவதை விடுத்து உங்கள் படங்களையும் கதைகளையும் அறிமுகப்படுத்துவது பொருத்தமா?

    ReplyDelete
  12. ஹை.......... இன்னிக்கு வகுப்புலே (ஃப்லிம்) ஷோ!!!!

    அந்தக் காலத்துலே சினிமாவுலே 'நியூஸ் ரீல்'னு ஒண்ணு காமிப்பாங்க. அதுபோல
    இருக்கு.

    பாடமெல்லாம் அப்புறம் படிக்கிறொம். இன்னிக்கு ஒரு நாள் 'குழந்தைகள் தினம்'
    கொண்டாடிக்கலாமா? :-))))

    ReplyDelete
  13. ///// Anonymous said... வலைச்சரம் பதிவில் பதிவுகளை அறிமுகப்படுத்துவதை
    விடுத்து உங்கள் படங்களையும் கதைகளையும் அறிமுகப்படுத்துவது
    பொருத்தமா?/////
    அடடே வாங்க அனானி!

    என்னடா ஆறு பதிவுகளா ஒரு அனானியையும்
    காணமேன்னு கவலைப் பட்டுக்கொண்டிருந்தேன்
    நீங்கள் வந்து என் கவலையைப் போக்கி விட்டீர்கள்! மிக்க நன்றி!
    நான் ஆசிரியர் பதவியில் இருந்து கொண்டு சுயமாக ஒன்று கூட
    எழுதிப் பதியவில்லை என்றால் - என்னய்யா மற்றவர்களை வைத்தே
    வாரத்தை ஓட்டிவிட்டாய் என்று கேட்பீர்கள். ]

    அதற்காக மட்டும் போடவில்லை. உங்களுக்குக் கேள்வி கேட்க வேறு
    எந்த வழியில் சான்ஸ் கொடுப்பதாம் ? அதற்காகத்தான் போட்டேன்.

    இந்தியா வல்லரசாகப் போவது உங்களைப் போன்ற அனானிகளை
    வைத்துத்தான்! ஆகவே உங்கள் பணி சிறக்க வாழத்துகிறேன்!

    ReplyDelete
  14. ///// துளசி கோபால் said...
    ஹை.......... இன்னிக்கு வகுப்புலே (ஃப்லிம்) ஷோ!!!!
    அந்தக் காலத்துலே சினிமாவுலே 'நியூஸ் ரீல்'னு ஒண்ணு காமிப்பாங்க. அதுபோல
    இருக்கு.
    பாடமெல்லாம் அப்புறம் படிக்கிறோம். இன்னிக்கு ஒரு நாள் 'குழந்தைகள் தினம்'
    கொண்டாடிக்கலாமா? :-)))) /////

    வாருங்கள் சகோதரி! நீங்கள் சொல்கிறபடியே செய்து விடுவோம்!
    இல்லையென்றால் இ.கொ. சண்டைக்கு வந்து விடுவாரே!:-)))))))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது