07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 16, 2007

நண்பர்களின் சில பதிவுகள்

இந்த வாரம் வலைச்சரம் அமைக்க வாய்ப்பளித்த பொறுப்பாசிரியருக்கு நன்றிகள்.

வலைச்சரத்தில் முதல் பதிவாக, சில சுவாரசியமான பதிவுகளின் சுட்டிகளின் தொகுப்பு இதோ

தமிழ்வலையுலகுக்கு புதியவரான பூர்ணிமாவின்
வலைப்பதிவினில் உலவிக் கொண்டிருக்கும்பொழுது அவரின் இசைப்பதிவுகளில் அவரின் குரலில் பாடல்கள் சிலவற்றை பதிந்துள்ளார். அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த
மாயாவி படத்திலிருந்து
"கடவுள் தந்த அழகிய வாழ்வு, உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடி வாழ்த்துப் பாடு" என்ற பாடல் இதோ


நண்பர்களிடையே ஏற்படும் இட ஒதுக்கீடு பற்றிய வாதப் பிரதிவாதங்களின் போதும், என் நண்பர்களுக்குப் நான் பரிந்துரைக்கும் ஓசை செல்லாவின் இட ஒதுக்கீடு பற்றிய ஆங்கில வலைத்தளம்.

நான் வலைப்பதிந்த ஆரம்பக் காலங்களில், படித்துவிட்டு என்ன ஒரு அருமையான கதை என்று வியந்த சிறுகதை ஆயிரத்தி முன்னூறு ரூபாய் ஒரு சிறுகதைக்கான இலக்கணத்தை இக்கதையில் பார்க்கலாம். இந்தக் கதையை எழுதிய நண்பரும் சக வலைப்பதிவருமான முத்து(தமிழினி) பிற்பாடு கதைகள் ஏதும் அதிகம் எழுதுவதில்லை. முத்து(தமிழினி) யிடம் இந்த வலைச்சரத்தின் வாயிலாக ஒரு விண்ணப்பம், கதைப் பக்கம் மீண்டு(ம்) வாங்க.

என் பேய்க்கதைகளுக்கு மிகப்பெரும் இன்ஷ்பிரேஷன் நாமக்கல் சிபியின் இந்த
அமானுஷ்ய வாசகி தொடர்கதை இதைப்படித்த பிறகுதான் எனது பயங்களின் வடிகாலாக பேய்கதைகளை எழுத ஆரம்பித்தேன்.

எப்படித்தான் பணிச்சூழலிலும் நேரம் கிடைக்கிறதோ என்று நான் அடிக்கடி வியப்பவர்கள், மா.சிவக்குமாரும், டி.பி.ஆர் ஜோசஃப் சாரும். மா.சிவக்குமாரின் பொருளாதரக் கட்டுரைகளின் தொகுப்பு இங்கே சிவா வின் மற்ற துறை சார்ந்த பதிவுகளும் போற்றுதலுக்குரியவையே

டி.பி.ஆர் ஜோசஃபின் திரும்பிப்பார்க்கிறேன் ஒரு அருமையான அனுபவத்தொடர்கட்டுரை புத்தகமாக வெளிவரும்போது நிச்சயம் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயம் இல்லை.


தொடரும்.

1 comment:

  1. எனது கதையைப் பற்றி குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி வினையூக்கி!

    புதிய பல பதிவர்கள் பல்வேறு திறமைகளுடன் இருக்கிறார்கள்.

    அவர்களையும் ஊக்கப் படுத்தும் விதமாக உங்கள் வாரத்தில் ஒரு பதிவை ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது