07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, September 27, 2007

கதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

சின்ன புள்ளயா இருக்கும் பொழுதில் இருந்து கதை கேட்கும் பழக்கம் நம்மை தொற்றிக்கொள்கிறது. வளர வளர அது ஏனே கதை படிக்கும் ஆர்வம் குறைந்து விடுகிறது, அதையும் மீறி சில கதைகள்தலைப்பாலோ அல்லது ஆசிரியரி அறிமுகத்தாலோ படிக்க நேரும் பொழ்து அந்த கதை நம்மை கவர்ந்து விடுகிறதுஅப்படி என்னை கவர்ந்த சில கதைகள்.

கதையோ அல்லது கட்டுரையோ எழுதும் ஆசிரியரின் வெற்றி என்பது அது கற்பனையா அல்லதுநிஜமா, அய்யய்யோ இது நிஜமாக இருக்க கூடாது என்று படிக்கும் வாசகனை பதை பதைக்க செய்யவேண்டும் அப்படி என்னை செய்தது அய்யனார் எழுதிய நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா! என்ற பதிவை படித்து அதைவிட்டு வெளியில் வர ரொம்ப நேரம் ஆனது. (வழி தெரியமல் சுத்திக்கிட்டு இருந்தனா என்று கேட்க கூடாது).

விடைபெறும் வேளையில் அன்பான வார்த்தைகளையே பேசுங்கள். ஒரு வேளை இதுவே நம் கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம்..! என்று தன் வலை பதிவில் எழுதி இருக்கும் வார்த்தைகள் நம்மை ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கும். இவர் ஸ்டாராக இருக்கும் பொழுதுதான் இவரின் பிளாக்கை பார்த்தேன், இத்தனை நாட்களாக இவரை மிஸ் செய்து விட்டோமேஎன்று வருந்தும் அளவுக்கு இவரின் எழுத்துக்கள் இருக்கு. இவர் எழுதிய குப்பமுத்து குதிரை..!


அடுத்து ஜெஸில்லா எழுதிய விட்டு விலகி நின்று... ஏதோ நம் தோழியின் கதை போல் இருப்பதாலோ என்னவோ பிடித்து போனது.


சிறுகதை செம்மல், சிந்தனை சிற்பி , வலையுலக பீம் பாய் (இப்படி எல்லாம் போடவில்லை என்றால் அடி விழும் அதுக்காகதான்)அவரிடம் சொன்னேன் உன் கதையை வலைசரத்தில் லிங் கொடுக்க போகிறேன் என்று அதற்கு அவர் சொன்னார் சும்மா கதை மட்டும் நல்ல கதை என்று போட்டு விடாதே தம்பியோட அருமை பெருமை எல்லாம் சொல் என்றார் இல்லை அடுத்த முறை பார்க்கும் பொழுதுகையை ஒடித்துவிடுவேன் என்று வேறு மிரட்டினார் அதுக்காகதான் மேலே இருக்கும் பில்டப் எல்லாம்.

இவர் எழுதிய பூனைகளுடன் உறங்கும் கோபால்

13 comments:

  1. மாமா ரொம்ப ஆழமா கவிதை எழுதலாம் ஒருவர். படிக்கும் போதே மனசு கனக்கும் விதத்தில் கதை எழுதலாம் ஒருவர். ஆனால் நையாண்டி பன்னுவது ரொம்ப கஷ்டம் மாமா. இதுல என்ன கஷ்டம்னு நிறய பேரு சொல்வாங்க. நம்ம யார நையாண்டி பன்றோமொ அவங்களயே புண்படுத்தாம பன்ரதுதாங்க நையான்டி.சம்பந்தபட்டவங்களே அத ரசிக்கனும் அதான் நையான்டி. எனக்குதெரிஞ்சு(நான் குட்டி பாப்பாதானே) நம்ம வலைப்பூக்கள்ல நம்ம குசும்பன் மாமா வ விட்டா ஆளே இல்ல.

    ஸோ வாழ்த்துக்கள் குசும்பு மாமா

    உங்கள் குசும்பு மேன்மேலும் வளர்ந்து பெருகிட இந்த குட்டி பாப்பாவின் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. மாமா எதோ ஒரு பீலிங்ஸ் ஆப் இன்டியா ல அந்த பின்னூட்டத்த போட்டுட்டேன். இத வெச்சு ரொம்ப பந்தா பண்ணிக்காதிங்க

    ReplyDelete
  3. நிலா, குசும்பன சரியா புரிஞ்சிகிட்டிங்களே :)

    ReplyDelete
  4. என்னோட கதைக்கு லிங்குதருகிறேனு சொல்லிட்டு இப்படி காலவாரிட்டீயே..
    குசும்பா..
    :)

    ReplyDelete
  5. ஏம்ப்பா சரம் தொடுக்கிறேன்ன்னு சொல்லிட்டு நாலே நாலு பூவ மட்டும் தான் கோர்த்திருக்க...? அதுவும் நாலும், ரோசாப்பூ...:)))))

    ReplyDelete
  6. "உங்கள் குசும்பு மேன்மேலும் வளர்ந்து பெருகிட இந்த குட்டி பாப்பாவின் வாழ்த்துகள்"

    தலைசீவி ஏற்றுக்கொள்கிறேன் எத்தனை நாள்தான் தலைவணங்கின்னு சொல்றது ஒரு சேஞ்சுக்குதான்:) (எவ்வளோ சேஞ்சுக்குன்னு கேட்க கூடாது)

    ReplyDelete
  7. நிலா said...
    மாமா எதோ ஒரு பீலிங்ஸ் ஆப் இன்டியா ல அந்த பின்னூட்டத்த போட்டுட்டேன். இத வெச்சு ரொம்ப பந்தா பண்ணிக்காதிங்க"

    ஹி ஹி ஹி அமைதியின் மறு உருவம், சாந்த சொருபி ஆகிய நான் அப்படி எல்லாம் செய்யமாட்டேன்:)

    ReplyDelete
  8. தம்பி said...
    நிலா, குசும்பன சரியா புரிஞ்சிகிட்டிங்களே :)"

    தம்பி இந்த குத்து குத்தாதய்யா வலிக்குது அப்புறம் அழுதுடுவேன்:(

    ReplyDelete
  9. மின்னுது மின்னல் said...
    என்னோட கதைக்கு லிங்குதருகிறேனு சொல்லிட்டு இப்படி காலவாரிட்டீயே..
    குசும்பா..
    :)"

    ஆமா நானே கதையை உங்க பேர்ல எழுதி அதுக்கு நானே லிங் தரவேண்டும் என்று சொன்னீர்கள் சரி என்று வந்தேன் ஆனால் பொட்டி வரவில்லை:(

    ReplyDelete
  10. TBCD said...
    ஏம்ப்பா சரம் தொடுக்கிறேன்ன்னு சொல்லிட்டு நாலே நாலு பூவ மட்டும் தான் கோர்த்திருக்க...? அதுவும் நாலும், ரோசாப்பூ...:)))))"

    நன்றி, இது பாராட்டா இல்ல ஆப்பான்னு தெரியவில்லை!!!

    ReplyDelete
  11. //
    சிறுகதை செம்மல், சிந்தனை சிற்பி , வலையுலக பீம் பாய் (இப்படி எல்லாம் போடவில்லை என்றால் அடி விழும் அதுக்காகதான்)
    //

    கதிர் பீம்பாய் அளவுக்கு குண்டால்லாம் இல்லியே ஒல்லியா தானே இருக்கார்

    ReplyDelete
  12. என்னுடைய இன்னொரு கமெண்ட் எங்கே??

    ReplyDelete
  13. மீள் பின்னூட்டம்

    நவீன் ப்ரகாஷ் கவிதையில்

    போட்டோ எல்லாம் சூப்பர் அதனாலதானோ என்னமோ நடுவுல கிறுக்கியிருக்கிறதை படிக்க முடியலை

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது