07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 7, 2007

ஜென்டில்மென் ஸ்பெஷல்

இன்னிக்கு ஜென்டில்மென் ஸ்பெஷல். அவங்கதான் 33% தரத்துக்கே மூக்கால அழறாங்க. நாம பெருந்தன்மையா 50% அவங்களுக்கு கொடுத்துடுவோம்னு முடிவு செஞ்சாச்சு. இன்னா செய்தாரை ஒறுத்தல் எப்படின்னுதான் நம்ம பாட்டன் பாடம் சொல்லி கொடுத்திருக்காரில்லையா?

மண்டபத்தில் தனியே நின்று புலம்பிக் கொண்டிருக்கும் ஒய்வு பெற்ற பேராசிரியர் - தருமி அவர்கள். கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே என்று பெருந்தன்மையோடு உண்மையை ஒப்புக்கொள்ளும் :) இவரது பதிவுகளின் ஆதாரத்தொனி சமூக அக்கறையும் மனித நேயமும்.

1. நாம் யாருக்கும் வெட்கம் / சுய ஒழுக்கம் / நியாய உணர்வு / தார்மீகக் கோபம் / தைரியம் / பொறுப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் சில விஷயங்களை பட்டியலிடுகிறார்.
2. பக்கத்து வீட்டுக்காரன் சிரித்து மகிழ்ந்திருக்கும்போது நானும் சிரித்து அவனோடு சந்தோஷமாக இருப்பதுதான் மனித நேயம் என்பது. அப்படியிருக்கையில் பொங்கலை ஜாதி/மத வேறுபாடு கடந்து ஏன் தமிழர் அனைவரும் கொண்டாடக் கூடாதென்று கேள்வி எழுப்புகிறார் இப்பதிவில்.
3. நம்பிக்கையாளர்கள் கடவுள் பெயரால் எதைச்சொன்னாலும் எப்படி நம்பி விடுகிறார்கள் என்பதைப் பற்றியும் (gullibility), அவர்களால் எப்படி இது பற்றிய காரியங்களில் objectivity - யோடு பார்க்க முடிவதில்லை என்றும் ஒரே மாதிரியான இரு சம்பவங்களைக் கொண்டு விளக்குகிறார் இப்பதிவில்.

இந்தப் பூமிப்பந்தைப் புரட்டிப் போடும் அடுத்த நெம்புகோல் தமிழ் மூளைகளிலிருந்து உருவாக வேண்டும் என்ற கனவுகளோடு பதிவெழுதும் மா.சிவகுமார். பொருளாதாரம், தோல் பதனிடும் துறைசார்ந்த மென்பொருள் நிர்வாகம் என்று பல வகைப்பட்ட விஷயங்களைத் தன் எழுத்தில் பகிர்ந்து கொள்கிறார். வலைப்பதிவர் பட்டறையின் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கியப் பங்காற்றியவர்.

1. தோல் பதனிடும் தொழில் அதற்கான மேலாண்மை மென்பொருள் போன்றவற்றைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார் இந்த இழையில்.
2. வளத்தைச் சேர்க்கும் பாதையில் நடக்கும் அனுபவங்களைப் பிறருக்கும் உதவியாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் இந்த இழையில் பதிகிறார்.
3. தனக்குப் பிடித்த புத்தகங்களையும் திரைப்படங்களையும் பற்றி இவர் எழுதும் குறிப்புகள் இங்கே.(இவர் மட்டும் எழுதும்னு நான் போடலை. உடனே அது ஒரு கூட்டுப் பதிவுன்னு வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் யாரும் கிளம்பிடாதீங்கப்பா)
4. தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கத்திலும் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார்.

நண்பர் நந்தா - இப்போது தனித் தளத்திலிருந்து எழுதுகிறார். கவிதைகள், கதைகள் என எல்லா வடிவத்திலும் எழுதி வரும் இவர் அவ்வப்போது மொக்கை வகைப் பதிவுகளிலும் கலக்குவார்.

1. நமக்கு ரொம்ப பிடிச்சவங்க, நம்ம மேல வெக்கிற அளவுக்கதிகமான நம்பிக்கையையும், அன்பையும் தவிர நமக்கு சந்தோஷத்தை தரக் கூடியது வேற எதுவும் இல்லை. என்ன பாக்கறீங்க? இது விக்ரமன் பட டயலாக் ஒன்னுமில்லை. நந்தா சாரோட கண்டுபிடிப்புத்தான். இதுபோன்ற பல காதல் தத்து(பித்து)வங்களை இவரது கதைகளில் காணலாம்.
2. இந்திய வரலாற்றைப் பற்றி எழுதப்போவதாக ரொம்ப நாட்களாகவே பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்துவிட்டு ஒருவழியாக இப்போது ஆரம்பித்திருக்கிறார்.
3. பெண்களின் சமத்துவத்திற்கான முதற்படி தன்னையே தான் உணர்ந்து கொள்ளலே என்று அழகாய்ச் சொல்லும் ஒரு கவிதை.
4. தான் ரசித்துப் படித்த புத்தகங்களைப் பகிர்கிறார் இந்தக் கட்டுரையில். (இவர் எழுதியிருக்கிற புத்தகங்களை தேடி கிடைக்கலியே நந்தான்னு சொன்னா, உடனே இவரே கொண்டு வந்து கொடுத்து படிக்கச்சொல்லுவதும் உண்டு சமயங்களில் - ரொம்ப நல்லவருப்பா இவரு)


வவ்வால் - தலைகீழ்விகிதங்கள் எனும் பதிவில் இவர் பல அறிவியல் கருத்துக்களை - குறிப்பாக விவசாயம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்கிறார். இவரது பெரும்பான்மையான பதிவுகள் முக்கியமானவையென நான் கருதுவதால் தனி இடுகைக்களுக்கான சுட்டி தராமல் இவரது வலைப்பூவின் சுட்டியையே இங்கு இடுகிறேன்.

இந்த வரிசைல இன்னும் பலரைப் பற்றி எழுத நினைத்திருந்தேன். சரம் தொடுக்கும் வாய்ப்பு இன்றே கடைசின்றதால அவசர அவசரமாய் சுருக்கிட்டேன். இன்னொரு முறை வேற எங்கயாவது வாய்ப்புக் கிடைச்சா பாக்கலாம். :)

5 comments:

  1. //
    அவங்கதான் 33% தரத்துக்கே மூக்கால அழறாங்க. நாம பெருந்தன்மையா 50% அவங்களுக்கு கொடுத்துடுவோம்னு முடிவு செஞ்சாச்சு
    //
    உங்க பெருந்தன்மை ரொம்ப புல் அரிக்குதுங்க!~@#$?

    ReplyDelete
  2. கலக்கல் தேர்வுகள் :)

    ReplyDelete
  3. சிவா, நான் எப்பவுமே அப்படித்தான் ரொம்ப பெருந்தன்மையானவளாக்கும். :)
    பாராட்டுக்கு நன்றி பாலா.

    ReplyDelete
  4. அட டா ஆச்சரியமா இருக்கு என்பதிவையும் ஒரு பொருட்டா நினைத்து சொல்லியிருக்கிங்க ,மிக்க நன்றி! தப்பா எடுத்துக்காதிங்க நான் தமிழ்மணத்தில் அதிகம் அறியப்பட்டப்பதிவர் அல்ல அதனால் தான் இங்கே என் பெயரையும் பார்த்ததும் இந்த ஆச்சரியம்! மீண்டும் நன்றி!

    //இவரது பெரும்பான்மையான பதிவுகள் முக்கியமானவையென நான் கருதுவதால் தனி இடுகைக்களுக்கான சுட்டி தராமல் இவரது வலைப்பூவின் சுட்டியையே இங்கு இடுகிறேன்.//

    சொல்லிக்கிறா போல அதில் எதுவும் இல்லை நீங்களே பார்த்து முடிவு செய்துகொள்ளுங்கள்னு வாசகர்களுக்கு சொல்வது போல இருக்கே :-))

    ஆனாலும் ஒரு வருத்தம் , நான் எழுதிய உலகத்தரம் வாய்ந்த(மொக்கை) கவிதைகளை பற்றி எதுவும் சொல்லவில்லை , என் பதிவில் பாதிக்கு மேல உலகத்தரம் வாய்ந்த கவிதைகள் தான். பொன்ஸ் நீங்களாவது சொல்லி இருக்க கூடாதா வவ்வால் ஒரு கவிஞர்னு (சே என்னை யாரும் கவிஞராவே ஏத்துக்க மாட்டேன்கிறாங்களே)

    ReplyDelete
  5. வவ்வால்,
    சும்மா இருங்க, அந்த கவுஜயெல்லாம் படிச்சிருந்தா, லக்ஷ்மி உங்களை "ஜென்டில்மென்"னில் சேர்த்திருக்கவே மாட்டாங்க.. 'அந்நியன்னு' முடிவு பண்ணி skip பண்ணிருப்பாங்க ;)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது