07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 19, 2008

கதைகள் - நினைவிலிருந்து!

'செத்தாலும்' இது கதையோட தலைப்பு ஒரு பெண் எதோ ஒரு கோபத்தில் செத்து போவதற்காக தூக்க மாத்திரைகளை விழுங்க்கி விடுகிறார் அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதாக போகும் இந்த கதைய படிச்ச நமக்கே செத்து திரும்பின அப்பிடி ஒரு அனுபவம். ஏனோ இவங்க நிறைய எழுதறதில்லை. கொஞ்சம் பெரிய கதை ஆனால் வாசிப்பது சலிப்பு ஏற்படுத்தாத நல்ல அனுபவம். கதை விரும்பிகள் தவற விடக்கூடாத கதை இது.

உங்கக்கிட்ட தாம்மா முதல்ல சொல்லிருக்கனும். ஆனா, புள்ள சரியில்ல, பொறந்தாலும் செத்துத் தான் பொறக்கும், அதுனால கீறி எடுத்தாகனும்னு டாக்டரம்மா சொன்னதுக்கப்றம், எப்டிம்மா சொல்லுவேன், உங்க பேரனோ, பேத்தியவோ, என் வயித்துல சுமந்துக்கிட்டிருக்கேன்னு!. பத்து மாசம் மட்டுமில்லாம, இன்னமும் என்னையச் சுமந்துக்கிட்டிருக்கிற உங்கக்கிட்ட, நா எம்புள்ளய பாதில இறக்கி வைக்கப் போறதச் சொல்லி, உங்க மேல சுமைய ஏத்தவா ? தாங்க மாட்டிங்கம்மா. கிள்ளுப் பூ.

இந்த கதைய மொத தரம் படிச்சப்ப எனக்கு முழுதுமா புரியலை இரண்டாவது மூன்றாவது முறை படித்தபோதுதான் முழுமையா புரிந்தது. எத்தனை தடவை படித்தாலும் அலுக்காத சலிக்காத கதை சொல்லி இவர் ஆனால் இவர் நிரம்ப எழுதுவது இல்லை என்பது மிக்க வருத்தமே. சிங்கப்பூரில் வீட்டுவேலை செய்யும் பெண்மணி கதையை சொல்லுவதாக மிக அருமையான கதை பொழப்பு.

"வீட்ல சண்டை போட்டுட்டு வந்துட்டண்டா" அப்படீன்னு அண்ணா பதில் சொன்னாங்க. காலம் மாறுது போல. பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டுக்கிட்டு புருஷன் வீட்டை விட்டுக் கெளம்பற லெவலுக்கு சமுதாயம் மாறிட்டு வருது. என்னால லீவ் போட்டு வீட்ல உக்காந்து கொழந்தையைப் பாத்துக்க முடியாது. வேணும்னா நீ லீவ் போட்டுக்கனு புது மிரட்டல் கடந்த ரண்டு வாரமா ஆரம்பிச்சிருக்காம். 'ஹைடெ'க் கணவன் மனைவி இடையே புரிந்துகொள்ளாமை 'ஈகோ' அதன் விளைவாக விளைந்தவை பற்றி செல்லமுத்து குப்புசாமியின் 'உண்மை' எனும் இந்த கதையில்.


"நான் வந்து ரொம்ப நல்ல பொண்ணு, எல்லாரு கிட்டேயும் நல்ல பழகுறேன் திடீர்னு ஒரு நாள் பாத்தா வயசு கால் நூற்றாண்டு ஆகிருச்சு. ஆஃபீஸ் போக வேண்டியது, வர வேண்டியது, சமைக்க வேண்டியது, சாப்பிட வேண்டியதுன்னு வாழ்க்கை ஒரே மெஷின் மாதிரி மாறிடுச்ச்சு. அப்பா அம்மா மாப்பிளை தேட ஆரம்பிச்சாங்க".

அவளுக்கு மாப்பிள்ளை பாத்து பிடிச்சிபோயிடுது அதுக்கப்புறம் என்ன பண்றாங்க போனை காதுல எடுத்து வெச்சிகிட்டு 24 மணி நேரமும் அப்பிடி என்னதான் பேசறாங்களோ தெரியாது பேசிகிட்டே இருக்குறாங்க. கடைசியில என்ன ஆகுது சஸ்பென்ஸ்.

ஒரு பெண் தன் கதையை சொல்வதாக எழுதியிருக்கிறார் செல்லமுத்து குப்புசாமி மாடர்ன் மஹாலட்சுமி.

நீங்க சாந்தி அம்மாதானே" எங்க அம்மாவை பார்த்து கேட்டார் அவர்.ஏன் எல்லாம் இப்படி இருக்காங்க? கிருஷ்ணா அம்மானு சொன்னா குறைஞ்சிடுவாங்களா? வீட்ல இருக்குற பொண்ணு பேற சொல்லிதான் எல்லாம் சொல்லுவாங்க. அவளுக்கு தான் கல்யாணமாகி மாமியார் விட்டுக்கு போயிட்டா இல்ல. இனியாவது கிருஷ்ணா அம்மானு சொன்னா என்ன?

இப்படி இயல்பான உரையாடலாக கல்யாண வீட்டில சந்திக்கும் காதலி பற்றிய கதை கொல்ட்டி பாலாஜியின் ச்ச வெட்டி பாலாஜியின் "தீயினால் சுட்ட புண்".

இது இவரு மொத மொதலா எழுதின கதையாம் நம்ப முடியுதா!?!? இப்ப நடந்த சர்வேசன் போட்டில கடைசி சுற்றுவரைக்கும் போன கதை நந்துவின் எதுனா வேலை இருந்தா குடு சார்.

சர்வேசனின் 'நச்'னு ஒரு கதை போட்டி க்ரூப் A கதைகள்.
சர்வேசனின் 'நச்'னு ஒரு கதை போட்டி க்ரூப் B கதைகள்.
சர்வேசனின் 'நச்'னு ஒரு கதை போட்டி க்ரூப் C கதைகள்.

நிறைய கதைகள் நினைவில் இருந்தாலும் அதை எங்கு படித்தேன் என நினைவில்லாததால் மிக குறைவான கதைகளுக்கே சுட்டி கொடுத்துள்ளது சற்று வருத்தமே.

5 comments:

  1. இத்தனை சுட்டிகளா - கதைச்சரத்திற்கு - படிக்க படிக்க அலுக்காத கதைகள். அருமை. அத்தனை சுட்டிகளையும், (வலைச் சர இவ்வாரச் சுட்டிகள்) அனைத்தும் சேமிக்கப் பட்டுள்ளன். சீக்கிரமே படித்து விடுகிறேன்.

    ReplyDelete
  2. அட என் கதையையும் சொல்லிட்டீங்களா? சும்மா தூக்கம் வராத ஒரு ராத்திரில எழுதுன முயற்சி அது. அதுக்கு இப்படியா? நன்றி சிவா

    ReplyDelete
  3. @சீனா சார்

    குறிப்பா சிவஸ்ரீ கதைகள் தவறாமல் படியுங்க. உங்க கருத்தை நான் அப்புறம் கேட்டுக்கறேன்.

    நன்றி

    ReplyDelete
  4. //
    நந்து f/o நிலா said...
    அட என் கதையையும் சொல்லிட்டீங்களா? சும்மா தூக்கம் வராத ஒரு ராத்திரில எழுதுன முயற்சி அது. அதுக்கு இப்படியா? நன்றி சிவா
    //
    சூப்பர் கதையாச்சே! விட முடியுமா?

    லிங்கில் கொடுக்கப்பட்ட சிவஸ்ரீ கதைகள் தவறாமல் படியுங்க. உங்க கருத்தை நான் அப்புறம் கேட்டுக்கறேன்.

    ReplyDelete
  5. இப்போதான் இந்த பதிவை கூகுல் ரீடரிலிருந்து படித்தேன். இந்த வாஅ ஆசிரியர் ப்நல்லாஎழுதியிருக்க்காரே.. ஒவ்வொருகதையும் இவர் கொடுத்த அந்த ஷார்ட் விமர்சனமே கதையை படிக்க தூண்டுதேன்னு நெனச்சு பின்னூட்டம் போட வந்தா...

    எழுதீயது நம்ம மங்களூர் சிவா.. நம்பவே முடியலை சிவா. சூப்பர். கண்டிப்பா சிவஸ்ரீ கதைகளை படிக்கிறேன். மத்தவங்க கதைகளெல்லாம் படிச்சாச்சு. :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது