07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, February 15, 2008

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - III

சிங். செயகுமார் என்று ஒரு வலைப்பதிவர் முன்பொரு காலத்தில் நிறைய விசயங்களை கவிதை வடிவாகவும், சிறுகதைகளாகவும் கொடுத்துக் கொண்டுருந்தார். எழுதியவைகளில் அனேகமானவை காதல் சார்ந்தும் அவரின் சமூக பார்வையாகவும் இருந்தது. சமீப காலமாக அவரைக் காண முடிவதில்லை, அச் சமயத்தில் படித்த காதலர்தினம்! என்ற தலைப்பில் ஒரு கவிதை என் மனதில் தைத்துப் போனதை உங்களின் பார்வைக்காக வைத்திருக்கிறேன். ஏனைய பதிவுகளும் அருமையாக இருக்கும், சுவைத்துப் பாருங்கள்.

கூட்டைக் களைத்த பின் ஒரு பறவைக்கு நேரும் கொடூரத்தை கொடுப்பது போலவே ஒரு கைம்பெண்ணிர்க்கு நம் சமூகத்தில் நிகழும் அவலத்தை தோலுறித்திருக்கார் பஹீமாஜஹான் என்பவர் அழிவின் பின்னர்...... என்ற தலைப்பின் கீழ். இவரின் "ஊற்றுக்களை வரவழைப்பவள், தடுமாறும் தனிப்பாதம்" என்ற பதிவுகளும் ஏனைய பதிவுகளும் மிக நேர்த்தியாக இருக்கிறது.

...எல்லா கதவையும்
திறந்து வைத்திருக்கிறாள்
சிறுமிவரைந்த வீட்டில்...

என்று ஒரு குழந்தையின் கள்ளமில்லாத்தனத்தை இந்த மூன்று வரிகளுக்குள் வைத்து, மனிதன் வளர்ந்த பிறகு எவ்வளவு சூது, வாதுடையவானுகிறான் என்று எண்ண வைத்து விடுகிறார் ராஜா சந்திரசேகர். மேலும் தொடர்ந்து "மனிதக் காடு" என்று பெயரிட்ட தலைப்பின் கீழ் நாம் மெது மெதுவாக எப்படி நம்முள்ளே இருக்கும் அந்த கபடமற்றக் குழந்தையை எப்படியெல்லாம் தொலைத்து, தேடித் தேடி எங்கே காண்கிறோமென்று அழகாக அந்தக் கவிதையில் பொதித்து வைத்திருக்கிறார். இவரின் இரண்டு மூன்று வரிக் கவிதைகளில் ஏதாவதென்றை படிக்க நேர்ந்தாலே அடுத்தடுத்து படிக்கத் தோன்றும் மாஜிக் தீம் இருக்கிறது மற்ற மற்ற பதிவுகளிலும்.

...என்ன செய்கிறோம்? எதைக் கண்டு கொண்டோம்?
ஆனந்தமாய் உண்டு களிக்க நாமே பயிர் செய்கிறோம்
ஆனால்அங்கு எம் பிணங்களையும் அறுவடை
செய்கிறோம்
எம்மைத் தாங்கும் மண்ணை நம் குருதியால்
நிரப்புகிறோம்...

இந்த ஒரு கட்டுரை வடிவ கவிதையே போதும் இந்த வளர்ந்து வரும் நெஞ்சத்துக்குள் பீறிட்டு வெளிக் கிளம்பும் தொலை நோக்குப் பார்வையும் நவன் என்ற பதிவரின் வாழ்வு சார்ந்த பட்டறிவையும் பறைசாற்ற. மென் மேலும் இவர் தொடர்ந்து தனது எண்ணங்களை இங்கே வைப்பார் என்று நம்புவோம்.

பிதற்றல்கள் என்ற வலைத்தளத்தில் சிரிப்புக்கும், சிந்திப்பதற்கும் ஏற்ப பல பதிவுகளுண்டு. அங்கே அவ்வப்பொழுது பித்தானாந்தாவாக ஒரு புது அவதாரம் எடுத்து விடுவார் அந்தத் தளத்தின் நிர்வாகிகளில் ஒருவர் போலும். அவ்வாறு எடுத்த அவதார கோலத்தில்தான் 262 : பித்தானந்தாவின் போதனை என்ற தலைப்பின் கீழ் ஒரு கவுஜாவை வடிதிருக்கக் கூடும். அதில் விளையாட்டுப் போக்கில் நிறைய தத்துவங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். இரட்டை தன்மையில் வாழும் அனைவரையும் ஒரு முறை உட்முகமாக திரும்ப வைக்கும் ஓர் பதிவு. ஏனைய பதிவுகளில் வெடிச் சிரிப்பிற்கும் (குறிப்பாக பின்னூட்டங்களில்), சுய முன்னேற்றக் கட்டுரைகளுக்கும் பஞ்சமே இல்லாமல் இருக்கிறது.

9 comments:

  1. தெகா, வித்தியாசமான பல பதிவர்களை அறியத் தருகிறீர்கள்! நன்றி...!

    ReplyDelete
  2. //தஞ்சாவூரான் said...

    தெகா, வித்தியாசமான பல பதிவர்களை அறியத் தருகிறீர்கள்! நன்றி...!//

    தஞ்சாவூரார் சொன்னதுக்கு ஒரு once more ...

    ReplyDelete
  3. இவ்வளவு படிக்கிறீர்கள் என்பதும்..நீங்கள் படிப்பது எந்த வகை அதிகம் சார்ந்தது என்பதும்
    வார்த்தைகள் மீதுள்ள பாசமும்..

    உங்கள் அறிமுகம் மூலம் கிடைக்கிறது..

    வாசிங்க..வாசிங்க..
    எங்க மனசில் எல்லாம்
    வசிங்க வசிங்க!

    ReplyDelete
  4. தஞ்சாவூரான், வவ்ஸ்,

    எஞ்சாய்!! :-).

    ReplyDelete
  5. நல்ல தொகுப்பு, தெகா!

    நன்றி!

    ReplyDelete
  6. மிகவும் வித்தியாசமாக என்னை போல் புதியவர்களுக்கு பல பழைய விசயங்களை தேடி பிடித்து தருகிறீர்கள் தெகா!!!

    ReplyDelete
  7. //ஏனைய பதிவுகளில் வெடிச் சிரிப்பிற்கும் (குறிப்பாக பின்னூட்டங்களில்), சுய முன்னேற்றக் கட்டுரைகளுக்கும் பஞ்சமே இல்லாமல் இருக்கிறது.//

    தள அப்படிதான் கலக்கி எடுப்பார், இப்ப ஆணி அதிகமாயிட்டுன்னு கப்சா விடுகிறார்!!!

    ReplyDelete
  8. தெகா,
    பல புதிய சுட்டிகளை கொடுத்திருக்கீங்க. நன்றி.

    ReplyDelete
  9. தென்றல், குசும்பன் மற்றும் ஆடுமாடு எல்லோருக்கும் நன்றி!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது