07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 5, 2008

காட்டுமல்லிப்பூ / நித்யமல்லிப்பூ - வளைகுடா

காட்டுமல்லி..அழகுதான்
என்றாலும் மணமில்லைதான்..
இங்கு தனி(வி)த்திருப்போர்க்குப்
பணம்தான் என்றாலும் ரணம்தான்.

நித்யமல்லி.. அழகும் வாசமும் உண்டு

சட்டென்று வாடும் குணமுண்டு
குடும்பத்தோடு இங்கு இருப்போர்க்கு
வசதியும், மகிழ்ச்சியும் உண்டு
சட்டென்று சலிப்பும் வருவதுண்டு..

நிலவு நண்பனின் பதிவில், வளைகுடாவிலிருந்து விடுமுறைக்கு வரும்போது காணும் காட்சிகளை நகைச்சுவையுணர்வோடு விவரித்துள்ளார்..

கீழை ராஸாவின் சிறகுகள் தொலைத்த சிட்டுக் குருவிகள் "எண்ணெய் தேசத்தில் இளமை தொலைத்தவர்" கதை. பலரின் அனுபவம் பேசும் கதை இது.

ஜெயக்குமார் ஷேக்குகளுடனான அனுபவங்கள் பற்றிக் கூறுவதைக் கேளுங்கள்.
ஷேக்கு என்றால் திரைப்பட ஷேக்கு போலவா? காவா, மஜ்லிஸ் இதெல்லாம் என்ன?

லொடுக்குவின் பாலைவனப் பயணம் பாருங்கள். மணலில் அந்த வாகனங்களில் போகும் போது உள்ளுறுப்புகள் அனைத்தும் இடம் மாறி மீண்டும் தன்னிலைக்கு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

ரியாத் பதிவர் இம்னுஹம்துன் ஒரு பயணத்தின் பின்னால் என்ன கதை இருக்கிறது என்று கூறுகிறார். இங்கே வருவதற்குப் பல கஷ்டங்கள்..வந்த பின் பல கஷ்டங்கள்..

20 comments:

  1. சில படித்த சில படிக்காத தொடுப்புகள்.
    மிக நல்ல பதிவு.

    ReplyDelete
  2. யக்காவ்! நிம்மதியா இருந்தா பிடிக்காதே:-)) நல்ல தொகுப்புகள்! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. கவா(qawa) என்பது வாசனை சேர்க்கப்பட்ட கடுங்காபி(ஏலக்காய்,பட்டை).மஜ்லிஸ்,கும்பலாக் உட்கார்ந்து பேசும் இடம்

    ReplyDelete
  4. //சில படித்த சில படிக்காத தொடுப்புகள்.
    மிக நல்ல பதிவு.//

    நன்றி சிவா..சிவா படிக்காத பதிவும் இதுல இருக்கா..அப்ப சரி

    ReplyDelete
  5. //யக்காவ்! நிம்மதியா இருந்தா பிடிக்காதே:-)) நல்ல தொகுப்புகள்! வாழ்த்துக்கள்//

    நன்றி..என்ன பண்றது அபி அப்பா..சீக்கிரம் ஊருக்குப் போயிட்டு வாங்க

    ReplyDelete
  6. //கவா(qawa) என்பது வாசனை சேர்க்கப்பட்ட கடுங்காபி(ஏலக்காய்,பட்டை).மஜ்லிஸ்,கும்பலாக் உட்கார்ந்து பேசும் இடம்//

    விளக்கத்துக்கு நன்றி..நானும் வளைகுடாதானே..

    இதுக்கு விளக்கங்கள் பதிவு படிச்சாத் தெரியும்னு சொல்றதுக்காக ஒரு பில்டப்..

    ReplyDelete
  7. வளைகுடாவா எங்க??

    ReplyDelete
  8. சில படித்த சில படிக்காத தொடுப்புகள்.
    மிக நல்ல பதிவு.

    இதுக்கு ஒரு ரிப்பீட்டு.

    பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    லிங்கை படிச்சுட்டு வர்றேன்.

    ReplyDelete
  9. புதிகைத்தென்றல்,

    கீழை ராஸா பதிவு நீக்கள் கொடுத்த லிங்க்கில் நான் படித்ததுதானே..

    ReplyDelete
  10. நல்லாருக்கு மலர், பல சுட்டிகள் நான் படிக்காதவை, மிகவும் ஆழமாக உழுது அழகாக தொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ///பாச மலர் said...

    அபி அப்பா,

    ரியாத்///
    எல்லாம் சுத்தி சுத்தி இங்க தான் குப்பை கொட்ரமா? இப்ப தான் நம்மளை துபாயில் இருந்து தாயிபுக்கு தூக்கி அடிச்சாங்க.

    ReplyDelete
  12. நன்றி கிருத்திகா..பயன்பட்டாச் சரிதான்..

    ReplyDelete
  13. //எல்லாம் சுத்தி சுத்தி இங்க தான் குப்பை கொட்ரமா//

    பின்னே? ஊர்ல இருந்தா இப்படிச் சரம் தொடுக்க ஏது நேரம்?

    அது சரி..தாயிபுன்னா சவுதில இருக்குற இடமா..இல்ல துபாய்ல அதே பேர்ல இருக்கா?

    ReplyDelete
  14. //பாச மலர் said...
    அது சரி..தாயிபுன்னா சவுதில இருக்குற இடமா..இல்ல துபாய்ல அதே பேர்ல இருக்கா?//
    இது சவுதி தான். மக்காவுக்கு அருகில் உள்ள இடம். 80 கி.மீ பக்கம்

    ReplyDelete
  15. தமிழ் பிரியன்,

    ஜெத்தா வந்த போது 2 முறை தாயிபு வந்திருக்கிறேன்..கேபிள் கார் பயணம் நல்ல அனுபவம்..

    ReplyDelete
  16. நான் இது வரை வாசிக்காத பல அற்புத பதிவுகளை பார்வைக்கு தந்துள்ளீர்..
    இதிலிருந்து வளைப்பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் உமக்கு அத்துபடி என்பது தெளிவாகிறது...தொடருங்கள் பாசமலர்..

    ReplyDelete
  17. //வளைப்பூங்காவின் மூலை முடுக்கெல்லாம் உமக்கு அத்துபடி என்பது தெளிவாகிறது//

    வலையில் இன்னும் எவ்வளவு இருக்கிறது..பொழுது போகாத கோளறுதான்.. ..அப்படியே போய்கிட்டேருந்தா வந்துக்கிட்டேயிருக்கும்...

    ReplyDelete
  18. ஒவ்வொரு பூவாகப் பார்த்துப் பார்த்து மாலையாகத் தொடுக்கும் உங்கள் பாணி அருமை.

    உங்கள் வாசிப்பில் நானுமிருப்பதை அறிவேன். பரிந்துரைப்பிலும் இருப்பதில் மகிழ்கிறேன்.

    ReplyDelete
  19. மலரின் உழைப்பு நன்றாகவே தெரிகிறது - வளைகுடாவினைப் பற்றிய நல்ல பதிவுகள் சுட்டப்பட்டிருக்கின்றன.

    ஆசிரியப் பொறுப்பினை நன்கு உணர்ந்து செயலாற்றுகிறார்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது