07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 17, 2008

சரம் தொடுக்க வரம் வேண்டி...

வலைப்பதிவுகளின் ஆரம்பகட்டத்தில் ஒரு திசைகாட்டியாய் அமைந்த மதியின் வலைப்பூ என்ற கருத்தை சிந்தாநதி,பொன்ஸ் மற்றும் கயல்விழி கூட்டணி ‘வலைச்சரமாக' தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கட்டத்தில் ஆங்கில சாகரத்திலிருந்து தமிழ்முத்துக்களை தேடிட உதவிய தளம் இன்று ஆயிரக்கணக்கான தமிழ் வலைப்பதிவுகளில் படிக்கத் திணறும் வாசகர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.தமிழ்மணத்திலே நட்சத்திர பதிவரை அடுத்து தனியிடம் கொண்டு சிறப்புற விளங்கும் தளம்.இதனை அழகுற நடத்தும் நண்பர்களுக்கு வாழ்த்துகள் ! இங்கு என்னை பங்கு பெற அழைத்தமைக்கு நன்றிகள்!

53 வலைச்சர ஆசிரியர்கள் எனக்குமுன் மிகச் சிறப்பாக சிறந்த வலைப்பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் அழகான வகைகளில் தொகுத்தளித்து ஒரு பாரம்பர்யத்தை உருவாக்கியுள்ளார்கள்.நாளும் பதியும் துளசி டீச்சர் போன்றவர்களே அலசி முடித்ததை மறுஅலசல் செய்திருக்கையில் பேருக்கு பதியும் நான் என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. அதிலும் சென்றவாரத்தில் ஆத்திக நண்பர் வி எஸ் கே யின் அசத்தலான தொகுப்பின் பின்னணியில் கதிகலங்கி இருக்கிறேன்.இரண்டு ஆண்டுகளாக மணிமலர் என்ற வலைப்பதிவை எழுதிவந்தாலும் கடந்த ஆறுமாத காலம் எந்தவித மன உந்துதலும் ஊக்கமும் இன்றி வாசகனாக மட்டும் வலையுலகில் வலம் வருகிறேன்.இந்த மனநிலையில் பொன்ஸ் அவர்களின் தொடர்ந்த உந்துதலாலும் கயல்விழி முத்துலெட்சுமியின் அன்புகட்டளையாலும் இம்முயற்சியில் இறங்குகிறேன்.இந்தவாரம் இனிய வாரமாக அமைய தொடர்ந்து முருகனருள் முன்னிற்க !

முதல்பதிவு சுருதிசேர ‘ஸ ப ஸ' எனக் கனைத்துக் கொள்வதைப்போல நம்மைப் பற்றி சொல்லிக் கொள்ள வேண்டுமாம். இவ்வளவு வலைச்சர ஆசிரியர்கள் கண்ணில்படாமல் இரண்டுவருடத்திற்கும் மேல் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதிலிருந்தே நம்ம சரக்கு எப்படியென்று தெரிந்திருக்கும்..சுப்பையா சார்மட்டுமே எனது சபரிமலை பயணத்தை குறிப்பிட்டுள்ளார்.வருகை எண்ணிக்கையை கொண்டு நான் ஆட்சிமொழிபற்றி அரசியல்சட்ட வடிவமைப்பு மன்றத்தில் நடந்த விவாதத்தை சுட்டிக்காட்டிய இந்த பதிவு பலரின் கவனத்தைக் கவர்ந்தது.எனது நட்சத்திரவாரத்தில் எனது இளமை மீள்நினைவுகளை பதிந்த
ஞாபகம்வருதே..தருமமிகு சென்னையில்
நான்மாடக்கூடலில் நான்!
ஓ கொல்கொதா !
...இந்த பதிவுகள் எனக்குப் பிடித்தவை.

இந்தளவு அறிமுகம் போதுமென்று நினைக்கிறேன்..நாளையிலிருந்து எடுப்பதும் தொடுப்பதும் நிகழும்.

7 comments:

  1. மணியன் சார்,

    உங்களுக்கு முருகன் அருள் முன்னிற்கும், தங்கள் எழுத்துக்கு பின்னாலும் நின்றுதவும் !

    ReplyDelete
  2. வாழ்த்துகள்..உங்கள் மலரும் நினைவுகள் நன்றாக இருந்தன..அதிலும் நான்மாடக்கூடல் பற்றியது மிகச் சிறப்பு.

    ReplyDelete
  3. நன்றி முத்துலட்சுமி காணாமல் போனவர்களை எல்லாம் தேடி கண்டுப்பிடித்து இஸ்துக் கொண்டு வந்ததற்கு :-)

    ReplyDelete
  4. முருகனருள் கூட, மலைவாசன் ஐயப்பனும் உடன் நின்று உங்கள் பணி சிறக்கச் செய்வார்கள்! வாழ்த்துகள் திரு. மணியன்!

    ReplyDelete
  5. வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி கோவியாரே..திரும்பவும் பதிவது மகிழ்ச்சி!
    உங்கள் ஊர் தனித்தன்மையானது தான் பாசமலர்.
    நன்றிகள் திகழ்மிளிர்.இனியபெயர்.நேர்மறையான உங்கள் கவிதைகள் சக்தி கொடுக்கட்டும்.
    ஆமாம் ராமசந்திரன் உஷா,மோனநிலையிலிருந்து இஸ்துகினு வந்துட்டாங்க !

    விஎஸ்கே,உங்கள் சொற்களும் அடையாளபடமும் முருகனே தமையனுடன் வந்தருளிய பிரமை உண்டாக்குகின்றன.இன்ஷா அல்லா !

    ReplyDelete
  6. வாங்க மணியன். முத்துலட்சுமி அவர்களின் அறிமுக பதிவில்தான் தெரிந்தது சற்றுமுன் தளம் தாங்களுடையது என்று.

    கலக்குங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மங்களூர் சிவா, வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

    சற்றுமுன் வலைத்தளம் ஒரு கூட்டுப்பதிவு. அதில் நானும் ஒரு பங்களிப்பாளன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது