07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 16, 2008

"உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே"

"உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே"

தொடுக்க முடியுமா என மலைப்பாக இருந்த வலைச்சரத்தை ஒருவழியாக கட்டிவிட்டேன். உங்களால் நிச்சயம் முடியும் என ஊக்கம் அளித்த கயல்விழி முத்துலட்சுமிக்கு எனது மனமார்ந்த நன்றி. ஒவ்வொரு நிலையிலும் பொறுமையாக அவர் கூட இருந்து இதைக் கட்ட உதவியதை எப்போதும் நினைவில் கொள்வேன்.

அதேபோல, முதல் பதிவு தொடங்கி, இந்தப் பதிவு வரையில் கேட்டபோதெல்லாம் பதிவர்களின் சுட்டியை அலுக்காமல் எடுத்துக் கொடுத்த கோவியாருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இவருடைய உதவி இல்லாமல் என்னால் இதை இவ்வளவு மனநிம்மதியுடன் கட்டி முடித்திருக்க முடியாது என நன்றியுடன் சொல்லிக் கொள்கிறேன்.

இந்த நினைவுகளுடன் மயிலையில் மாடவீதியில் சென்றுகொண்டிருந்த போது, வழக்கம் போல நாயர் கடைக்கும் சென்றேன். நானே சற்றும் எதிர்பாராத வகையில், அங்கு டீயை உறிஞ்சியபடி மயிலை மன்னார்!

"இன்னா? ஒரே நன்றிமளையில நனைஞ்சுகிட்டு வர்றமாரி இருக்கேபோல!" எனக் கிண்டலடித்தான்!

'அதெப்படி உனக்கு தெரிஞ்சுது?' என ஆச்சரியத்துடன் வினவினேன்.

"இன்னாமோ
கயல்விளி, கோவின்னு பொலம்பிகிட்டு இருந்தியே! நமக்கு பாம்பு காது சாமி! நட்பு பத்தி நான் சொன்னதைப் பதிவாப் போட்டவந்தானே நீ! எனக்கா புரியாது! வா! வந்து குந்து இந்த வடையைக் கடிச்சுக்கினே நம்ம நாயர் டீயை அடி! இப்ப இன்ன, நீ அடிக்கடி கண்டுக்கற ஆளுங்களைப் பத்தி சொல்லணும் அவ்ளோதானே! மிச்சத்த நான் சொல்லிக்கறேன்!" என்றவனை நன்றியுடன் பார்த்தேன்!

நீ இந்த மாரி வலைப்பூ எளுதறதுக்கு
அருண் வைத்தியநாதன்ற ஒருத்தர்தான் காரணம். அவர் இப்ப தமிழ்ல எளுதறதில்ல அதுனால அவரை பேரை மட்டும் சொல்லிட்டு விட்டுருவோம்! சரியா! ஆனா, அவருக்கு ஒரு 'டேங்க்ஸ்' மட்டும் சொல்லிருவோம்! மிமிக்ரில தொடங்கி இப்ப குறும்படம் என்ற நிலையையும் தாண்டி, ஒரு முழுநீள திரைப்படத்தையும் இவர் தயார் பண்றாருன்னு கேள்விப் பட்ட்டேன்! வாள்ஹ இவர் முயற்சி!

'
மொகமூடி'ன்னு ஒருத்தரு! குஜாலா எளுதுவாரு! செமையா உள்குத்து வைச்சு எளுதறதுல மன்னன்! இவரோட பதிவுல பின்னூட்டம் போடணும்னுதானே நீ வலைப்பூவே ஆரம்பிச்சே!

அப்போ, எப்படி ஒரு வலைப்பூவைத் தொடங்கறதுக்கு ஒனக்கு ஒதவி பண்ணினது
டோண்டு என்னும் ஒரு பெரியவரு.

அப்புறம் ஒனக்கு இதுல ஒதவி பண்ணி நீ இப்ப வைச்சிருக்கியே, அந்த முருகன் படத்த ஒனக்கு கொடுத்து, ஒதவி பண்ணினது
செல்வன்ற ஒரு பதிவர். புரட்சிகரமான கருத்துகளை அஞ்சாது சொல்ற ஒரு ஆளு! வேலை ஜாஸ்தியாச்சுன்னு ரொம்ப எளுதறதில்ல இவரு!

எலவசக்கொத்தனார்னு ஒருத்தர்! ஒனக்கு ரொம்பவே ஒதவில்லாம் பண்ணிருக்கார்னு அடிக்கடி சொல்லியிருக்கே! பின்னூட்ட நாயகன்னு வேற இவருக்கு ஒரு பேரு இருக்குன்னும் சொல்லியிருக்கே! ரொம்பவே சிந்திச்சு எளுதற ஆளு! அதுவே கொஞ்சம் இவரோட பதிவுக்கு ஒரு ஆபத்தான விஷயம். இருந்தாலும், அதையெல்லாம் ஒரு அட்டகாசப் பின்னூட்டம் போட்டு திசை திருப்பி ஒரு 1000, 500 பின்னூட்டம் வாங்கி சொன்னதுலேர்ந்து எங்கியோ போயி.... சரி விடு! அடுத்த ஆளைப் பாப்பம்!

அதாரு? ஆங்! ஆசான் ஆசான்னு எப்ப பாத்தாலும் சொல்லிகிட்டே இருப்பியே!
சுப்பையா வாத்தியாரு... கண்ணதாசனைப் பத்தி எளுதினாரு பாரு! அத்த அடிச்சுக்க இதுவரைக்கும் ஆரும் இல்லேன்னு அடிச்சு சொல்லுவேன் நானு! இன்னாமோ தெரியல, அத்த அம்போன்னு விட்டுட்டாரு! சோசியம்லாம் கூட எளுதறாருன்னு சொன்னேல்ல! அவரையும் தவறாம படிச்சிருவோம்!

குழலின்னு ஒருத்தரோடத்தான் நீ மொத மொதல்ல சண்டை போட்டேன்னு சொன்னேல்ல! ஒரு கொள்கை வீரன்யா அவன்! தப்போ ரைட்டோ, எடுத்த சொல்லை தாண்ட மாட்டாரு.! இவரைப் படிச்சு வைக்கறது நல்லதுன்னு நீ சொல்லியிருக்கே! சரின்னுதான் எனக்கும் படுது!

சாமி சாமின்னு அலையுற ஒனக்கு தீனி போடற மாரி
கொமரன், ரவி, ராகவன்ன்னு சில தோஸ்துங்க இருக்காங்கன்னு தெரியும்! அல்லாரும் நல்ல ஆளுங்கதான்னுன்னாலும், அப்பப்ப ஒரு கொளப்பத்துல நாம இன்னா பண்றோம்னு தெரியாம, சிலது பண்ணிடறாங்க! கீதாம்மா, வல்லிம்மா, தி.ரா.ச., ஜீவா மாரி தான் செய்ய வேண்டியது இன்னான்னு இவங்களுக்கு இன்னமும் புரியலைன்னுதான் நான் சொல்லுவேன்! ஆண்டவனைப் பத்தி புரிஞ்சுகிட்டா, நடுவுல நடக்கற எதுவும் நம்மளை உறுத்தக் கூடாது. அல்லாமே ஒரு காரண காரியத்தோடத்தான் நடக்குதுன்றது புரிஞ்சிரும். அப்ப, நாம போயி கேள்வி கேட்டுகிட்டு இருக்க மாட்டோம்! அத்தக் கேக்கறதுக்குத்தான் சாமியே சில ஆளுங்களை வைச்சிருக்காரே! பொறவால, நமக்கு எதுக்கு அந்த வேலை? ஆனாக்காண்டியும், இவிங்க பதிவெல்லாமே நல்லாத்தான் இருக்கும். படிக்கறதுக்கு சுவையாவும் இருக்கும்!

சர்வேசன்னு ஒரு ஆளு! பதிவுன்னு ஒண்ணும் ஜாஸ்தியா எளுதறதில்லியாம்! ஆனாலும், இவரு சொல்றதைப் பாக்க பலபேரு இங்க வருவாங்க! போட்டி, சர்வேன்னு எல்லாரையும் தன்கிட்ட இழுக்கற இவரை படிச்சே ஆகணும்!

வடுவூர் குமாருன்னு ஒரு எஞ்சினீயர். சிங்கப்பூர்ல இருக்காரு. கட்டடக் கலை பத்தி ரொம்ப நல்லா எளுதுவாரு. தங்கமான மனுசன்! வம்பு தும்புக்கே போவாதவரு! சுவையா இருக்கும் இவரோட பதிவுங்கல்லாம்!

துபாயிலேர்ந்து ஒன்னோட தோஸ்த்து, அதான் முந்தி ஒரு தபா இட்டாந்தியே, சுல்தான்னு ஒருத்தர், சுருக்கமா ஆனா அதே சமயம் ஆழமா நல்ல கருத்தெல்லாம் சொல்லி பதிவு போடறாரு. அவரும் ஒரு மறக்க முடியாத ஆளுப்பா! நீ கூட ஒரு தபா அவரைப் போயி பாத்தேல்லே துபாய் போயி!

அல்லாத்தியும் சொல்லியாச்சுன்னுதனே நெனைக்கறே! ஒன்னோட தோஸ்த்து கோவி கண்ணனைச் சொல்லலைன்னா, இந்த வலைச்சரம் நீ எளுதினதுக்கே அர்த்தம் இல்லே! நீ சண்டை அதிகமா போடற ஆளும் இவருதான்! சந்தோசப்படற ஆளும் இவருதான்! இவருக்கும் ஒனக்கும் இன்னா பொருத்தம்னு பல நாளு யோசிச்சிட்டு, சரி, அது நமக்கு வேண்டாத வேலைன்னு விட்டுட்டேன்! இவரு பாட்டுல்லாம் ரொம்ப கட்டுவாரு. அதான் எனக்கு பிடிச்சது! எளுத மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டாராமில்ல! ஆனா, அந்த கவிதைப் பதிவுலியாவது இவரு வந்து எளுதினா நல்லதுன்னு நெனைக்கறேன்!

இத்தோட நீ ஆட்டத்த முடிச்சுகிட்டு பளையபடி, ஒனக்குத்தெரிஞ்ச வேலைக்கு போறதுதான் நல்லதுன்னு சொல்லிக்கறேன் சாமி! ' என்றான் மயிலை மன்னார்!

'அதெப்படி ஒரு குறள் கூட சொல்லாம நீ முடிக்கலாம்?' என நான் செல்லமாகக் கோபிக்க,
'அட! இதானா? அதுக்கென்ன சொல்லிட்டாப் போச்சு!


"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று" [100]

ஏதோ ஒரு ஆசையில இங்க வந்து எளுதற நீ! ஒன்னால நல்லா இனிப்பா சொல்ல முடியும்னா சொல்லு. இல்லாட்டி 'கம்'முன்னு இரு. இது எப்டி இருக்குன்னா, நல்ல இனிப்பான பளம் கண்ணுக்கு எதுருல இருக்கறாப, அத்த விட்டுட்டு, புளிக்கற காயைத் தின்ற மாரின்னு ஐயன் சொல்றாரு. புரிஞ்சா சரி!" எனச் சொல்லி விடை பெற்றான் மயிலை மன்னார்!

அதுதாங்க நானும் சொல்லிக்கறேன் உங்க எல்லாருக்கும்! சந்தோஷமா இருக்கத்தான் இந்த வலைப்பதிவுக்கு வந்திருக்கோம்! இங்க இருக்கற நேரத்தில் எல்லாரையும் மகிழ்த்தி, நல்ல கருத்துகளைச் சொல்லி, இங்கு வருபவர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருக்க வைக்க வேண்டியது உங்கள் கடமை எனச் சொல்லி எனக்கு இந்த நல்வாய்ப்பினை அளித்த அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன்.

நன்றி.
வணக்கம்.
முருகனருள் முன்னிற்கும்!


23 comments:

  1. அருமையான வலைச்சர மாலைகளுக்கு நன்றி SK!

    சூடிக் கொடுத்த வீஎஸ்கே, வலைச்சரத்தைத்
    தேடி அருளவல்ல நல்பதிவா, நாடி நீ
    பூங்கடவற்கு எம்மைப் பொருத்திட்ட இச்சரத்தால்
    நாங்கடவா வண்ணமே நல்கு!

    ReplyDelete
  2. கயல்விழி யக்கா! எங்க SK-வை உசுப்பேத்தி சரம் சரமாத் தொடுக்க வைச்சமைக்கு நன்றி!

    அருண் வைத்யநாதன், செல்வன் என்று பழம்பெரும் பதிவர்களை மீண்டும் லைம்லைட்டுக்குக் கொண்டு வந்த மன்னாருக்கும் நன்றிகள்!
    கொத்தனாருக்குப் பின்னூட்டக் கணக்கை ஏன் கொறைச்சீங்க? 501, 1001ன்னு இருக்கணும்! :-)

    வாத்தியார், குழலி, கோவி, சர்வேசன் எல்லாரும் நாம அடிக்கடி போற பதிவுகள் தான்!

    //எளுத மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டாராமில்ல//

    யாரு சொன்னா? அடுத்த வாரம் ஏதோ ஒரு மதிப்பீட்டுப் பதிவு போடப் போறாராமில்லை!

    ReplyDelete
  3. //கொமரன், ரவி, ராகவன்ன்னு சில தோஸ்துங்க இருக்காங்கன்னு தெரியும்! அல்லாரும் நல்ல ஆளுங்கதான்னுன்னாலும், அப்பப்ப ஒரு கொளப்பத்துல நாம இன்னா பண்றோம்னு தெரியாம, சிலது பண்ணிடறாங்க!//

    ஹிஹிஹிஹி!
    முருகனருள் முன்னிற்க!

    //அல்லாமே ஒரு காரண காரியத்தோடத்தான் நடக்குதுன்றது புரிஞ்சிரும். அப்ப, நாம போயி கேள்வி கேட்டுகிட்டு இருக்க மாட்டோம்!//

    கேள்விகளால் வேள்விகள் செய்ய வாரீர் ஜெகத்தீரே!

    //அத்தக் கேக்கறதுக்குத்தான் சாமியே சிலா ஆளுங்களை வைச்சிருக்காரே!//

    யானே அவன்! அவனே யான்! :-)

    ReplyDelete
  4. //அல்லாத்தியும் சொல்லியாச்சுன்னுதனே நெனைக்கறே! ஒன்னோட தோஸ்த்து கோவி கண்ணனைச் சொல்லலைன்னா, இந்த வலைச்சரம் நீ எளுதினதுக்கே அர்த்தம் இல்லே! நீ சண்டை அதிகமா போடற ஆளும் இவருதான்! சந்தோசப்படற ஆளும் இவருதான்! இவருக்கும் ஒனக்கும் இன்னா பொருத்தம்னு பல நாளு யோசிச்சிட்டு, சரி, அது நமக்கு வேண்டாத வேலைன்னு விட்டுட்டேன்!//

    நான் கூட நினைத்துப்பார்த்தேன். எதிர் துருவ காந்தபுலன் ஈர்ப்பு தவிர வேறு எதும் புலனாகவில்லை. :)

    // இவரு பாட்டுல்லாம் ரொம்ப கட்டுவாரு. அதான் எனக்கு பிடிச்சது! எளுத மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டாராமில்ல! ஆனா, அந்த கவிதைப் பதிவுலியாவது இவரு வந்து எளுதினா நல்லதுன்னு நெனைக்கறேன்!//

    எழுதிடுவோம், நண்பர்கள் பலரும் மாதத்திற்கு ஒன்றாவது எழுதுங்கள் என்று அன்புக்கட்டளை இட்டார்கள். என்னைப் பி(ப)டிப்பவர்களின் அன்புக்கு என்றும் கட்டுப்பட்டவன். விரைவில்...நாளையே கூட எழுதுவேன். இங்கு வெளிப்படையாக அதுபற்றி கேட்டிருக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி !

    நாளைக்கு ஒருவருக்கு ஆப்பு வைக்க இருக்கிறேன். ஆப்பு எங்கெல்லாம் வைப்பாங்க ? தேர் கிளம்பும் போது கிளப்பிவிட சக்கரத்தில் ஆப்பு வைத்து கிளப்புவார்கள். வீதிஉலா வெற்றிகரமாக நடந்து அருள்பாலிக்க அவருக்கு ஆப்பு வைக்கப்படும், ஆப்பு ஆயத்தமாக இருக்கிறது.
    :)

    வெற்றிகரமாக பல்வேறு பதிவர்களின் அறிமுகமும் சிறப்பான எழுத்தும் என உங்கள் வலைச்சரம் விலையற்ற ( இலவசம் இல்லை, மதிப்பிட முடியாத) நற்சரம். பாராட்டுக்கள் வீஎஸ்கே ஐயா.

    ReplyDelete
  5. ///இன்னாமோ தெரியல, அத்த அம்போன்னு விட்டுட்டாரு!////

    உணமைதான் வி.எஸ்.கே சார். ஒரு கட்டயாத்தின் பேரில் அதை நிறுத்தும்படி ஆனது. ஆனாலும் 51 அத்தியாயங்கள் எழுதினேன்.எழுதியது A4- Sizeல் சுமார் 150 பக்கங்கள் இருக்கும்.அதற்கு நல்ல வ்ரவேற்பும் இருந்தது. நீங்கள் கூட தினமும் வந்து சில தட்டச்சுப்பிழைகளைத் தனி மின்னஞ்சலில் சுட்டிக்காட்டுவீர்கள்.
    உடபனே சரி செய்வேன்.

    பிற்கு ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் எழுதலாம் என்று உள்ளேன்.

    ஒரு மிக்கியமான விஷயம்.கவியரசரைப் போன்ற விஷய ஞானம் உள்ளவரைப் பற்றி யார் எழுதினாலும் சுவையாகத்தான் இருக்கும் - அது நானென்று மட்டும் இல்லை!

    அதோடு அந்தத் தொடரை எழுதும்போது எனக்கு முருகன் அருள் முன்னின்றது.
    அந்த சுவையான எழுத்துக்களுக்கான பாராட்டுக்குரியவர் அவர்தான்.

    நான் வெறும் கருவி மட்டுமே!
    I am only a tool!

    ReplyDelete
  6. அட்டகாசமான வலைச்சரம்.

    ஆமா...மன்னார்கிட்டே சொல்லி இங்கேயும் ஒரு 'வடை'யை அனுப்புங்க.

    வெயிட்டீஸ்:-)

    ReplyDelete
  7. நல்லதொரு வாரம்..நல்ல தொடுப்பு..பாராட்டுகள்..வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. அந்த கடைசி பத்திதான் எல்லாத்திலேயும் ஹைலைட். இந்த மாதிரி எல்லாரும் நினைக்க ஆரம்பிச்சிட்ட தமிழ்மணம் உண்மையிலேயே மணக்கும்.நன்றி மிக நிறைவாக அனைவரையும் நினைவு கூர்ந்து எங்களுக்கும் சுட்டிக்காட்டியதற்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. கிருத்திகா சொன்னதே நானும்...

    ReplyDelete
  10. நல்ல நல்ல சுட்டிகளுடன் நல்ல வாரம். நன்றி டாக்டர்
    பின்னூட்டம் மூலம் GK திரும்ப வரும் நல்ல செய்திக்கும் நன்றி.

    ReplyDelete
  11. உங்க கிட்டத்தானே ரவி நான் நினைக்கறதை உரிமையோட சொல்ல முடியும்!

    தப்பா நினைக்க மாட்டீங்கன்னு நம்பறேன்.
    நன்றி.

    ReplyDelete
  12. // எதிர் துருவ காந்தபுலன் ஈர்ப்பு //

    அப்பாடா! இது ஒண்ணுலியவது நமக்குள்ள ஒரு ஒத்த கருத்து இருக்குதே! அதுவரை மகிழ்ச்சி!கோவியாரே!

    ReplyDelete
  13. 'மீண்டும் வரப்போகிறேன்' எனச் சொன்னது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, கோவியாரே!

    ReplyDelete
  14. மீண்டும் தொடருங்கள் ஆசானே! எல்லாப் பதிவுக்கும் வந்து பின்னூட்டம் இட்டு பாராட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  15. தொடக்கி வைச்சதே நீங்கதானே டீச்சர். மிக்க நன்றி வலையுலகக் கடவுளே!:)

    ReplyDelete
  16. உங்க அளவுக்கு இல்லேன்னாலும், ஏதோ எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு பண்ண ட்ரை பண்ணினேன், 'பாசமலர்'.

    நன்றி.

    ReplyDelete
  17. பாராட்டியதுக்கு நன்றி, கிருத்திகா அவர்களே

    ReplyDelete
  18. நான் எழுத நினைத்து, மறதியால் விட்டுப்போன என் இரு இனிய நண்பர்கள் திரு. வடுவூர் குமார், திரு சுல்தான் அவர்களையும் இப்போது இணைத்திருக்கிறேன். அவர்களது மன்னிப்பையும் கோருகிறேன், என் கவனக்குறைவுக்கு!

    ReplyDelete
  19. நன்றி, திரு. குமார், திரு. சுல்தான் அவர்களே!

    ReplyDelete
  20. மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி, கிருத்திகா அவர்களே!

    ReplyDelete
  21. ஒரு வாரம் வலைச்சரத்துக்கு ஆசிரியராக இருந்து, வகைவகையான சரங்களைத் தொகுத்து, பல நல்ல சுட்டிகளை அளித்து, பல பதிவர்களை நினைவுகூர்ந்து, பலருக்கு நன்றி சொல்லி அழகாக முடித்திருக்கிறீர்கள். பாராட்டுகள். நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. VSK சார்,அருமையாக எடுத்து தொடுத்து நிறைவாக முடித்து விட்டீர்கள், வாழ்த்துகள் ! உங்கள் முருகனை அடுத்து வரும் எனக்கும் சற்று அருளிடச் சொல்லுங்கள் !!

    ReplyDelete
  23. அட! என்ன ஐயா? மன்னிப்பெல்லாம்..
    கஷ்டப்படுத்தாங்கீங்க.
    எல்லோரையும் எல்லா சமயத்திலும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது