07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, April 4, 2008

22. நன்றி மற்றும் சிறு இடைவேளை & கும்மி தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நன்றி நண்பர்களெ, கும்மி கழக தோழர்களே, அப்ரசின்ட்களே இத்தோட கவுண்ட் டவுன் முடிச்சிக்கரேன்...ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு சரம்/பதிவு போட்டுட்டேன்... யாருக்காவது வருத்தம் இருந்தா நேர்ல பாத்து ஆப்பு வெச்சிடுங்க, மனசுல எதயும் வெச்சிக்காதிங்க.

இன்னைக்கு தாங்க நமக்கு இங்க வேலை பாக்குற இடத்துல கடைசி நாளு ... இனிமே பொட்டி தட்டர வேலை இல்லை...அதனால இப்ப இந்த லாப்டாப் திரும்ப குடுக்கனும்.

நாளை அடுத்த வேலை துவங்க இருக்கிரேன்.அடுத்த வேலையிடம் கர்னாடகா, கேரளா மற்றும் மகாராஸ்ட்ரா.

வீட்டுக்கு போய் மூட்டைய கட்டனும். மீண்டும் விரைவில் இம்சிக்க வருவேன் வருவேன் வருவேன். எப்பன்னு தெரியல குசும்பன் கல்யாணத்து நேரடி ரிப்போர்ட்டோட வருவேன்னு நினைக்கிறேன்.

முக்கிய அறிவிப்பு
புதிய தேசிய மறுமலர்ச்சி கும்மி கழகத்தின் முதல் மாநில மாநாடு இல்ல உலக மாகாநாடு அபிஅப்பா வீட்டில் வரும் 15 ஏப்ரல் அன்று தொடங்கி பின் நடுக்கடலுக்கு இடம் பெயர்ந்து பிறகு 16 அன்று குசும்பன் கல்யாணம் வரை நடக்கும் என தெரிகிறது. (பிளான் எல்லாம் அபிஅப்பா பண்ணிருக்கார் என்ன நடக்கப்போகுதோ)

சீக்கிரம் அது பற்றிய கட்சித் தலைவர் டாக்டர் திரு மங்களூர் சிவா வெளியிட்டு அனைவரையும் அலைகடலென திரண்டு வர அழைப்பு விடுப்பார்.

மற்ற பதவிகள் யார் யாருக்கு என்பதை தலைவர் அவர்களை சீக்கிரம் வெளியிடுமாறு கேட்டு கொல்கிறேன். (எனக்கு உரிய அங்கிகாரம் கிடைக்கவில்லை என்றால் கச்சி தாவவேண்டி வரும் என்பதை மிக தாழ்மையுடன் தெரிவிக்கரேன்)

நன்றி இம்சை / Venky
Please mail me @ babypavan@gmail.com in future.

11 comments:

  1. என்னாது வேலைய விடறப்ப லேப்டாப் திரும்ப குடுக்கணுமா???

    ச்சின்னபுள்ளதனமால்ல இருக்கு!!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் வெங்கி :))

    மாற்றங்கள் தான் வாழ்க்கைக்கு மிக அவசியமானவை!

    எனவே மாற்றங்களை ஏற்று பின் திரும்பவும் கும்மிக்கு விரைவில் அட்டெண்டன்ஸ் கொடுக்க வேண்டும் என்று கூறி அந்நாளை எதிர்பார்த்து

    உங்களின்...
    ஆயில்யன்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் வெங்கி! மாற்றங்கள் நிச்சயமாக மேன்மையைத் தரும்! உங்களது நோக்கங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்..........
    அன்புடன்
    தமிழ் பிரியன்

    ReplyDelete
  4. உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றியடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ///வருவேன் வருவேன் வருவேன்.///


    ஒரு இம்சை மூணு இம்சையா திரும்பி வருவீங்களா?

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் வெங்கி.... :)))

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் மாம்ஸ்.நானும் லீவுக்கு ஜொள்ளியிருக்கேன்..(நம்ம மங்களூர் மாமுவோட சகவாசம் தான்:P kummi maanaatula kalanthukka muyarchi pannaren :)

    ReplyDelete
  8. அருமை நண்ப,

    வெங்கி என்ற பவன் அப்பா

    மாற்றங்கள் பலவிதங்களில் பலவித காரணங்களால் ஏற்படும். இம்மாற்றம் விரும்பிய - அதிகம் விரும்பிய மாற்றம். ஆகவே - வாழ்விலும், எடுத்த காரியத்திலும், செய்யும் தொண்டிலும் வெற்றி மேல் வெற்றியாக வந்து குவிய, எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்பொழுதும் கிட்ட நல்வாழ்த்துகள்.

    புரிதலுணர்வோடு கை கொடுக்கும் துணைவிக்குத் தனிப்பட்ட பாராட்டுகள்.

    நன்றி வெங்கி

    ReplyDelete
  9. ஒரு வார காலம் வலைச்சர ஆசிரியராக இருந்த இம்சை பொறுப்புடனும், மிகுந்த ஈடுபாட்டுடனும், அதிக உழைப்புடனும் பணியாற்றி - தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையைச் செவ்வனே செய்து முடித்திருக்கிறார். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உறுதி படுத்தி இருக்கிறார். 23 பதிவுகள் - ஐந்து நாட்களில் - பெற்ற மறு மொழிகளோ சற்றேரக்குறைய 800 - அறிமுகப்படுத்திய பதிவுகளோ 132 - அத்தனையும் முத்தான் சத்தான பதிவுகள். வெறும் கும்மியோ மொக்கையோ இல்லை. 2005, 2006, 2007 ஆண்டுகளில் பதியப்பட்ட பதிவுகள். சரம் தொடுத்த விதம் மிக அருமை. பாராட்டுக்குரியது.

    மழலைச்செல்வங்களில் ஆரம்பித்து, அப்பா, பாலபாரதி, ஆங்கிலப் பதிவுகள், காப்பி ( அசல் Copy), புத்தகங்கள், திருநங்கைகள், மருத்துவர்கள்,மழலைப் பதிவுகள்,கிரிக்கெட், சமையல், சினிமா, சாதனைப் பெண்கள், மொக்கை, கவிதைகள், சங்கங்கள், அலுவலக சிரிப்புகள், இயற்கை வைத்தியம், திகில் நிகழ்வுகள், இயற்கைக்கு எதிரான நிகழ்வுகள், குசும்பனின் கும்மி, அபி அப்பாவின் கும்மி, விடை பெறும் பதிவு என கலக்கி விட்டார்.

    இதுவரை வலைச்சர ஆவணங்களைன் படி அதிக மறு மொழி பெற்ற பதிவையும் ( யாரோ சீனாவாம் - 136), அதிகப் பதிவுகள் 18 ( மங்களூர் சிவாவாம்) ரெகார்டையும் தகர்த்தெறிந்து விட்டார் இம்சை. ஒரு பதிவிற்கு 411 மறு மொழிகள்.

    வலைச்சரப் பதிவர்கள் எழுந்து நின்று Standing Ovation கொடுத்து இவரைக் கவுரவிக்க வேண்டும்.

    பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் வெங்கி

    ReplyDelete
  10. //நாளை அடுத்த வேலை துவங்க இருக்கிரேன்.அடுத்த வேலையிடம் கர்னாடகா, கேரளா மற்றும் மகாராஸ்ட்ரா.
    //

    வாழ்த்துக்கள் சகோதரா..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது