07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 4, 2008

கதை சொல்லும் பதிவர்கள்!!!!

சிறுவயதிலிருந்து கதை கேட்டே வளர்ந்ததினாலோ? என்னவோ? நம்மில் பலருக்கும் கதை கேட்கவும் ,படிக்கவும் அதிக ஆர்வம் இருக்கும்.நம் பதிவுலகில் அப்படி தங்களது சிறுகதைகள் மூலமும், தொடர் கதைகள் மூலமும் கவர்ந்த சில பதிவர்களைப் பற்றி இன்று உங்களோடு பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன்...

அருட்பெருங்கோ இவரை எல்லோரும் காதல் கவிஞராய் அறிந்திருப்போம் இவர் தொடர்கதைகளும் சிறுகதைகளும் மிக அற்புதமாய் படைத்து இவரது அமராவதி ஆற்றங்கரையில் நம்மை சிறைப்பிடித்து வைத்திடுவார்...

இவரது காதல் பயணம் தொடர்கதையே அதற்கு ஒரு நற்சான்று.... 14 பகுதிகளை கொண்ட அக்கதை சிறந்த ஒரு பதிவு ஒவ்வொரு பகுதிக்கும் தொடக்த்தையும் அழகிய காதல் காதல் கவிதைகளோடு தொடங்கியிருப்பார்.....

இவரது காதல் பயணத்தில் ரசித்த சில கவிதைகள் உங்களுக்காக...

"என்னை அடிக்க நீ கை ஓங்கும் போதெல்லாம்
கண்களை மூடிக்கொண்டு சுகிக்கதான் நினைக்கிறேன்.
ஆனால் நீ அடிக்க வரும் அழகைக் கண்டதும்
இமைக்காமல் நிற்கின்றன என் கண்கள்."

"என் ஆயுள் முழுவதுக்குமான
சந்தோசம்,
உன் அரை நொடிச் சிரிப்பில்
இருக்கிறது!"

இக்கதையை அவர் நிறைவு செய்த விதம் எதிர்ப்பார்க்காத ஒரு திருப்பம். என்ன ? உங்களுக்கும் அப்படி என்ன திருப்பம்? என அறிய ஆவல் வந்து விட்டதா? மேலே உள்ள சுட்டியை படித்து தெரிந்துக்கொள்ளுங்களேன்.
அக்கதை முழுவதுமே இனிமையாய் இருக்கும்!

இவரது சென்னைக் காதலும், திருச்சிக் காதலும் சிறுகதை ஒரு வித்தியாசமான முயற்சி. பல பதிவர்கள் கலந்துக்கொண்ட, சர்வேசனின் 'நச்' கதை போட்டியில் முதல் பரிசுப் பெற்ற கதை

காதல் கதைகள் மட்டுமல்லாது, வட்டாரமொழி மணத்துடன் இவர் படைத்த கணக்கம்பட்டியாரு கத மற்றும் ஆறுமுவம் பொண்டாட்டி கதைகள் மிகவும் நல்ல பதிவு... இவை மட்டுமல்லாது, பல சிறந்த படைப்புகளை இவரது வலைத்தளத்தில் நாம் படித்து மகிழலாம்....

நிலாரசிகன் இவரை நாமெல்லாம் ஒரு கவிஞராய் அறிந்திருப்போம். சமிபகாலமாய் இவர் இவரது சிறுகதைகள் நம்மை வியக்க செய்கின்றது.... சிறுகதைகளுக்கு என்றே நிலாரசிகன் சிறுகதைகள் என்ற தனி வலைப்பூ மூலம் பல அருமையான கதைகளை பதித்து வருகிறார்..

இவரது நிமிடக்கதைகளும் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் இருக்கும்.. இவரது நிமிடகதைகள் இரண்டு கதைகள் (14வது கதை, இடுகாடு ) தினமணிக் கதிரில் பிரசுரமாகியிருக்கிறது ....

இவரது சேமியா ஐஸ் சிறுகதை, ரசிக்க வைத்த ஒரு கதை... சிறுவனின் அவ்வயது சின்ன ஆசையைக்கொண்டு அற்புதமாய் கொண்டுப்போயிருப்பார் அக்கதையை... தனலட்சுமி டாக்கீஸ் சிறுகதை, தான் வேலைசெய்யும் திரையரங்கம் மீது ஒருவர் வைத்திருக்கும் நேசத்தை விளக்கும் மிக நல்ல கதை..இவரிடம் மேலும் பல அற்புதக் கதைகளை எதிர்ப்பார்க்கலாம்...

ஜி தன் கதைகளின் உவமைகளின் மூலம் நம்மை ரசிக்க வைப்பார் இவர் காட்சிகளை விவரிக்கும் விதம் அழகாய் இருக்கும்... இவரது காதலா காதலா பதிவில் அவர் கதையின் கதாநாயகி இறகு பந்து விளையாடுவதை அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார்

"மென்மையாய் பின்னிய வலையால், நளினமாய் சுழலும் ஆனந்தியின் ஒவ்வொரு அடியையும் வாங்குவதற்காகவே ஒவ்வொரு முறையும் தனது மொட்டை தலையைக் காட்டி கொண்டிருந்தது இறகுப்பந்து"

மிக அழகாக கொண்டு சென்றிருப்பார் இக்கதையை..

சிறகுகள் சிலுவைகள்... கதையையும் மிகவும் ரசிக்கும் விதத்தில் பதித்திருப்பார் இவரது தொடர்கதை தேவதை சிறகுகள் மிகவும் அருமையான் படைப்பு இதோ உங்களுக்காக இங்கே சுட்டிகள்
தேவதை சிறகுகள்-1
தேவதை சிறகுகள்-2
தேவதை சிறகுகள்-3
தேவதை சிறகுகள்-4
தேவதை சிறகுகள்-5

இவரது வலைப்பூவில் நம்மை ரசிக்க வைக்கும் பல கதைகள் உங்கள் கதையார்வத்திற்க்கு பரிசளிக்கும் வித்ததில் அமைந்திருக்கும். படித்து மகிழுங்கள் இவரது கவிதைகளும் சிறப்பாக அமைந்திருக்கும்...

கவிநயா இவர்களது கதைகள் சமீபத்தில்தான் கண்ணில் பட்டது . எதார்த்தமான நிகழ்வைக் கொண்டு எழுதிய அப்படி என்னதான் பேசுவாளோ? கதை மிகவும் கவர்ந்தது. பெண்பிள்ளைகள் மேல் அம்மாவிற்க்கு இருக்கும் ஒரு சின்ன பயத்தை மையமாய் வைத்து,கதையை அழகாய் கொண்டு போயிருப்பார் கதையை .கதையின் முடிவு நெகிழ்ச்சியாய் அமைந்திருக்கும்..

அவளைப் போல்... கதையில் தன் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசும் பெற்றோரை சிந்திக்க வைக்கும் படி எழுதியிருப்பார்.... இவரது எழுத்துநடை மிக இயல்பாக அமைந்திருக்கிறது இவரது கதைகள் அனைத்தையும் இங்கே படிக்கலாம்

கதைகளை படித்து மகிழங்கள் நாளை சந்திப்போம்!!!!

3 comments:

  1. வினையூக்கி பதிவை பார்க்கவேயில்லையா ??

    ReplyDelete
  2. நான் ரசித்து படித்த கதைகள் பலவற்றை நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள் எழில்,

    சில புது பதிவுகளின் அறிமுகமும் உங்கள் பதிவின் மூலம் அறிந்துக் கொண்டேன்,

    அழகான 'கதைசரம்' வாழ்த்துக்கள் எழில்!!

    ReplyDelete
  3. கதை சொல்லும் பதிவர்கள் எப்படி எப்படிக் கதை சொல்கிறார்கள் எனப் பார்க்க ரசிக்க உதவும் தொகுப்பு. வலைக்குள் வந்த பிறகு கவிநயாவின் கடைசி மூன்று கதைகள் மட்டும் படித்திருக்கிறேன். 'அவளைப் போல்' படித்து விட வேண்டியதுதான். மற்றவர்களைப் இப்பதிவு மூலம்தான் அறிகிறேன். நன்றி எழில்பாரதி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது