28.07.2014 முதல் ஆசிரியப் பொறுப்பேற்பவர்

தியானா

பூந்தளிர்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 29, 2009

வலைச்சரத்தில் முருவின் நான்காம் பதிவு

பூக்கடை


தூரத்தில் இருந்து பார்க்கும் போதே பளபளப்பாக பல வண்ணங்களில் கண்களுக்கு குளிர்ச்சியாகத் தென்படும் தொகுப்பு, அருகில் நெருங்க, நெருங்க மனதை மயக்கும் வாசம், மல்லிகையா? ரோஜாவா? இல்லை மருகுவா? என்றால், ஒவ்வொரு அடி நடைக்கும் ஒவ்வொரு வாசனை. அந்தக் கடையைக் கடந்து செல்கையில் மனம்மாறி, வீட்டம்மாவுக்கு ஒருமுழமாவது மறுக்காமல் வாங்கிச் செல்பவர்கள் தான் அதிகம்.

விளம்பரமே இல்லாமல் எப்படி இந்த வியாபாரம்?வண்ணமயமான பூக்களின் தொகுப்பா?, மனதை மயக்கும் மலரி நறுமணமா? இல்லை மனிதனின் மனதின் அடிஆழத்தில் மலருக்கும், அதன் நறுமணத்திற்கு மயங்கும் படி எழுதிவைக்கப்பட்ட மென்பொருளா? எனக் கேட்டால் நிச்சயம் விடை காண்தல் அறிது!அதுபோல தமிழ்நாட்டு கிராமங்களின் புழுதி மண்ணின் வாசத்தைக் கொண்ட இடுக்கைகளை எழுதும் பதிவர்களின் பதிவை ஒரு முறை படித்தாலே, உடலை விட்டு மனம் தனியே பிரிந்து தான் சிறுவயதில் விளையாடிய தெருக்களில் போய் உட்கார்ந்து கொள்ளும் அனுபவத்தை உணரமுடிம்.


**********************************


தீராத பக்கங்கள்என்ற பதிவை எழுதிவரும் மாதவராஜ் அவர்கள். பெயருக்கு ஏற்றபடியே மா + தவ + ராஜ் தான். கிராமவங்கியின் பணியாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தவர், ஞானபீடம் ஜெயகாந்தன் அவர்களின் பெண்ணை மணந்தவர் என்ற அடையாளங்களை எல்லாம் தாண்டிய மிக எளிமையான மற்றும் தரமான எழுத்துக்கு சொந்தக்காரர். வாழ்வில் நடக்கும் சின்ன, சின்ன விசயங்களில் கூட அழகுணர்வைக் காண்பதும், நவீனத்துவத்தால் எதார்த்ததை விட்டு விலகி வந்துள்ளதைப் பற்றி பல இடுக்கைகள் எழுதிவருபவர்.அவற்றில் சில இடுக்கைகள்…(ஊரரிந்த பதிவருக்கு (பூக்கடைபோல்) விளக்கமோ, விமர்சனமோ கொடுக்கத் தேவையில்லை)மனிதர்களும் மிருகங்களும் அல்லது மிருகங்களும் மனிதர்களும்


கொஞ்சம் நிர்வாணமாய் நின்று பாருங்கள்!


எங்கள் காதலில் எழுத்தாளர் ஜெயகாந்தன்!


இந்தக் கவிதைகள் உங்களை என்ன செய்கின்றன?
******************************

தமிழ் வீதி
எனும் பதிவை எழுதிவரும் ச.தமிழ்செல்வன் அவர்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தவர். பிறந்து வளர்ந்த புழுதி மண்ணுக்கு எல்லோரும் பெருமதிப்பு கொடுக்க வேண்டும் என நினைக்கிறார். இடுக்கைகளில் தெக்கத்தி கிராமங்களும், கிராம திருவிழாக்களும், திருவிழாக்களில் நடக்கும் நாடகங்களும் விளக்கப்பட்டிருக்கின்றன.கிடாக்கறிச்சோறும் உறுமி மேளமும்....கோடையும் அப்படித்தான்...நாக்கின் திசைநோக்கி...போன்றவை எனக்கு மிகவும் பிடித்த இடுக்கைகள்.
மேலே சுட்டப்பட்ட இருவரும் அரசியல் சார்ந்தவர்கள் என்பதால், அவ்வப்போது அரசியல் அடிக்கும் இடுகைகளும் வெளிவரும். நமக்கு தேவையானதை நாம் கவனமாக் எடுத்துக் கொள்வது நமது திறமை.

****************************
ருத்ரனின் பார்வை

எனது அடுத்த பெருமை மிகு அறிமுகம் மனநல மருத்துவர் ருத்ரன் அவ்ர்கள் தமிழில் எழுதும் வலைப்பூ, ருத்ரனின் பார்வை.மேலும் விளக்கம், விமர்சனம் கொடுக்கவும் தேவையில்லை எனபதால் எனக்கு பிடித்த இடைக்கைகளின் வரிசை…சில நேரத்து வார்த்தைகள்


உள்


*************************************
வலைசரத்தின் நான்காம் நாளை பெரிய எழுத்தாளர்கள் எழுதும் பதிவுகளை சுட்டிக்காட்ட பயன்படுத்தியது பெருமையாக உணர்கிறேன்.


மீண்டும் சந்திக்கும் வரை விடை பெறுவது,


அப்பாவி முரு

வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க ஆர்வமா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!!

6 comments:

 1. அன்பின் முரு

  அருமையான் பதிவர்கள் மூவர் - இடுக்கைக்கு மூவர் எனற கணக்கா ?

  மாதவராஜ் அறிவேன் - இடுகைகள் படித்திருக்கிறேன் - மறு மொழிகள் இட்டிருக்கிறேன்

  தமிழ் செல்வன் கேள்விப்பட்டிருக்கிறேன் - பதிவிற்குச் சென்றதில்லை

  ருத்ரன் அறிவேன் - பதிவிற்குச் செணிருக்கிறேன் - மறு மொழி இட்டதில்லை

  ந்நல்வாழ்த்துகள் முரு

  ReplyDelete
 2. எல்லாம் பெரிய பெரிய தலைகளா இருக்குராங்க! ரொம்ப நன்றி முரு!

  ReplyDelete
 3. வாழ்த்துகள் முரு.

  அருமையான பதிவர்கள்.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 4. நான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 5. பதிவில் குறிப்புட்டுள்ள மூவரின் இடுகைகளையும் படிக்கின்றேன்.

  இவர்கள் எனக்கு இப்போ தான் அறிமுகம்.

  எல்லாருக்கும் தெரியும் போல
  நன்றி முரு.

  தெரியாமலே இருப்பதற்கு தாமதமா தெரிந்து கொள்ளுவது ஒன்றும் தவறில்லைதானே.

  ReplyDelete

BLOGGER MEET MADURAI 2014

BLOGGER MEET MADURAI 2014
வலைப்பதிவர்கள் சந்திப்பு மதுரையில்... மேலும் தகவல்கள் அறிய இங்கு கிளிக்கவும்.

தமிழ் மணத்தில் - தற்பொழுது