17.06.2013 முதல் ஆசிரியப் பொறுப்பேற்பவர்

ஆசியா உமர்

சமைத்து அசத்தலாம்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com

Saturday, February 25, 2012

பல்சுவை பதிவர்கள்


வணக்கம் அன்பிற்கினிய உறவுகளே வலைச்சரச்சனி இன்றைய பதிவில்அரசியல்,சினிமா,காமெடி,அனுபவம்,பயணம்,சிறுகதை,தொடர்கதை,கட்டுரை,சமூகம்,நையாண்டி,சிந்தனை,கவிதை,படத்தொகுப்பு,படைப்புகள்,செய்திகள் என பல்வேறு களங்களுக்கும் தங்கள் எண்ணங்களை கொண்டு சென்று பதிவுகளாய் பகிர்ந்து வரும் பதிவர்களில் என் பார்வையில் பட்ட சில பதிவர்களை சரமாகத் தொடுத்து அவர்களின் தளங்கள் வழியே சில புதிய அறிமுகங்களுடன் உங்களை சந்திக்கவருவதில் மிக்க மகிழ்ச்சி.பெரும்பாலும் இந்த பதிவர்களை பற்றி நீங்கள் நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள், எனினும் என் போன்ற புதியவர்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் விளைந்த சரம்.


இவர்களின் சிந்தனைகள் இன்னும் வளமோடு பெருக மனமாற வாழ்த்தி பல்சுவை பதிவர்களின் சரத்திற்க்குள் செல்வோமா

அட்ராசக்க வலைத்தளம் நடத்தும் அண்ணன் சிபிதான் இன்றுவரை பதிவர் நம்பர் ஒன்.இவரது சினிமா விமர்சனம் பார்த்தபின் பதிவர்கள் தியேட்டருக்கு போகலாம்.


அடுத்து வேடந்தாங்கல் என்ற வலையில் எழுதி வரும் கரூண் ஆசிரியரான இவரின் மகான்களின் வாழ்க்கையில் தொடர் மிகப்பிரபலம்

தமிழ்வாசி வலைத்தளம் நடத்தும் பிரகாஷ் ப்ளாக்கர் டிப்ஸ் முதல் சின்னப்பாப்பா பெரிய பாப்பா என காமெடி வரை கலக்குபவர்


விக்கியுலகம் வலை நடத்தும் வெங்கட் அவர்கள் வலையில் ரத்தக்கறையின் டைரி உண்மையான போர்வீரனின் டைரிக்குறிப்பு,பேச்சுலர் வாழ்க்கை என தொடர் நீள்கிறது.

நாஞ்சில் மனோ என்ற வலையில் எழுதிவரும் மனோ அவர்கள். காமெடி சீரியஸ் சமூக அவலம் என அனைத்தையும் பகிர்ந்தளிப்பவர். 

மெட்ராஸ் பவன் வலைத்தளம் நடத்திவரும் சிவா சினிமா உட்பட அனைத்து விஷயங்களையும் ஆழமாக சிந்திப்பவர். சமீபத்திய சமூகம் சார்ந்த பதிவுகள் மிகவும் பிரபலமானவை.

கவிதை கட்டுரை சினிமா காமெடி எந்த களமாய் இருந்தாலும் களத்தில் இறங்கி வீடு கட்டுகிறார் சுரேஷ்

அடுத்து நாற்று வலைநடத்தும் நிரூபன் திடகாத்திரமான பதிவுகளின் சொந்தக்காரர்.ஈழ போரின் உச்சங்களை கண்முன் நிறுத்துபவர்.புதியவர்களை ஊக்குவிப்பவர்

நாய் நக்ஸ் நக்கீரர் மாதமிரு பதிவுகளில் வந்தாலும் நகைச்சுவை மற்றும் சீரியஸ் பதிவிடுவதில் வல்லவர்.கழுகில் வெளிவரும் இவரது சமூகம் சார்ந்த பதிவிடுவதில் வல்லவர்.

பிரபாகரின் தத்துப்பித்துவங்கள் வலை நடத்தும் பிலாஷபி பிரபாகர் இவரின் பிரபா ஒயின்ஷாப் பதிவுகள் வலையுலகில் அதிபிரபலம் இவர் எழுதும் சினிமா விமர்சனம் ஏகபிரபலம்

கவிதைவீதி சவுந்தர் கவிதை முதல் இன்றைய சூடான அரசியல் விஷயம் வரை பகிர்ந்தளிப்பவர்

கூடல் பாலா என்று வலை நடத்தும் சுற்றுப்புற சூழல் நாயகன் பாலா அவர்கள்.இவரின் அணு உலை உண்ணாவிரத போராட்டம் பதிவுலகை ஒன்று சேர்த்தது

ஆணிவேர் சூர்யஜீவா சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளின் ஆழத்தினை பதிவுலகில் விமர்சிப்பவர்

உணவு உலகம் சங்கரலிங்கம் விழிப்புணர்வு பதிவுகளின் சொந்தக்காரர்


ஸ்டார்ட் மியூசிக் வலையின் உரிமையாளர் நமது அண்ணன் ராமசாமி நான் சொல்லித்தெரியப்போவதில்லை.எந்த களமானாலும் இறங்கி கலக்கும் ஆல் ரவுண்டர் 

தங்கம் பழனி நடத்தும் பழனி ப்ளாக்கர் டிப்ஸ் முதல் மாவட்டங்களின் கதை வரை அலசுபவர்

ஈரோடு தங்கதுரை வலையில் பகிர்ந்து வரும் தங்கத்துரை  – மொபல் டிப்ஸ்,கம்ப்யூட்டர் டிப்ஸ் என தொழிநுட்ப பதிவுகளின் ஆல்ரவுண்டர்

ராஜபாட்டை ராஜா கணினி டிப்ஸ் முதல் இன்றைய மாணவர்களுக்கு கல்வி டிப்ஸ் வரை தொகுத்தளிப்பவர்

Counsel for any வலை எழுதும் நண்பர் சண்முகவேல் அது இது என எந்த விஷ்யத்தையும் ஆழமாக விவரிப்பவர்


அனுபவம் அரசியல் சினிமா என அனைத்திலும் தீர்க்கமான பார்வைகாட்டும் வீடு திரும்பல் மோகன் குமார்

அரசியல் செய்தி சினிமா என அனைத்து துறைகளிலும் பதிவுகளை பகிரும் இட்லிவடை

நண்பர்கள் ராஜ் கிரிக்கெட் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளை எழுதுபவர்.தற்சமயம் பதிவுலகிலிருந்து விலகி நிற்கிறார். மீண்டும் வாங்க ராஜ்.

வடகரை தாரிக் அவர்களின் வலைதளம் பல்சுவை வார இதழ்களின் டவுன்லோட் சென்டர்


புதிய பதிவர் அறிமுகம்



உழவன் என்ற வலை நடத்தி வரும் நண்பர் உழவன் ராஜா அவர்கள்.உலகின் எங்கோ ஓர் மூலையில் நடக்கும் அநியாத்தினை கண்டு மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே என அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.இதோ அவரது பதிவு சொத்துக்களுக்கு பத்திரப்பதிவு மட்டும் செல்லாது

என் இனிய தமிழ் உலகம் திரு சாய்பாபா அவர்கள் நடத்தி வருகின்றார்.ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான அவர் ஓய்விற்க்கு பின் வலையெழுதி வருவதாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.நண்பரின் வலையில் தானே பெயர் வந்த காரணம் பார்க்கச் செல்வோமா..

சின்னசின்ன சிதறல்கள்  என்ற வலையில் பகிர்ந்து வரும் சகோதரி அகிலா மனதில் பட்ட அன்றாட நிகழ்வுகளை வலையில் பகிர்ந்து வருபவர்.நேற்றைய என்கவுண்டர் பற்றிய அவரது பார்வை

பொதினியிலிருந்து - என்று வலையில் எழுதிவரும் நண்பர் கிருபாகரன் சினிமா விமர்சனங்களை தனது வலையில் பகிர்ந்து வருகிறார் 

சங்கர் கணேஷ் வலையில் எழுதிவரும் நண்பர் கணேஷ்.அவரின் வாழிய வாழியவே கவிதை ஒன்று

கண்மணி அன்போடு வலையில் பகிர்ந்து வரும் சகோதரி கண்மணி அவர்களின் கவிதை துளி ஒன்று காதலின் பதம்

அம்மாவிற்க்கு என்ற வலைத்தளம் நடத்தி வரும் நண்பர் செந்தில்குமார் தனது வலையில் எழுதிய இயந்திர நிமிடங்கள் கவிதை 

அடுத்து என் அனபு மித்ரா என்ற வலைத்தளத்தில் தனது எண்ணங்களை பகிர்ந்து வரும் சகோதரி  மித்ரா அம்மா அவர்களின் சமீபத்திய பதிவு சந்தியாவிற்க்கு,குழந்தைவளர்ப்பு பற்றிய விஷயங்களை அலசுகிறார்.


புதியதாய் அறிமுகமான பதிவர்களை வரவேற்று அவர்கள் தமிழ் வலையுலகில் மென்மேலும் வளர வலைச்சரத்தின் சார்பாக மனமார வாழ்த்துகின்றேன்

நன்றி நண்பர்களே !

நாளைய பதிவில் தமிழ் பதிவர்களுக்கு உதவும் திரட்டிகள்,பேஸ்புக்,கூகுள் ப்ளஸ் போன்ற சமூகவலைத்தளத்தில் பதிவுகளை பகிர்வதற்குத் தேவையான டிப்ஸ்களின் வழியே உங்களை சந்திக்க வருகின்றேன்

நட்புடன் நலம் நாடும்

சம்பத்குமார்


82 comments:

மகேந்திரன் said...

முதலில் குறிப்பிட்ட அனைவரும்
பதிவுலக சிற்பிகள்...
புதியவர்கள் அறிமுகத்தில் சகோதரி அகிலா தவிர
அனைவரும் எனக்கு புதியவர்களே..
சென்று பார்க்கிறேன் நண்பரே.

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா, எத்தனை அறிமுகங்கள்? புது பதிவர்கள் அனைத்தும் எனக்கு புதுசு, புக் மார்க்டு

நன்றிகள்

இராஜராஜேஸ்வரி said...

"பல்சுவை பதிவர்கள்"பகிர்வுகளுக்குப் பராட்டுக்கள்.

koodal bala said...

இந்த சிறியவனுக்கும் இடமளித்தமைக்கு நன்றி !

koodal bala said...

புதிய அறிமுகங்கள் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் ......அறிமுகப்படுத்திய தங்களுக்கும் ....

கோகுல் said...

பதிவுலகஅனுபவசாலிகளின் மத்தியில் புதியவர்களை அறிமுகப்படுத்துவது அவர்களுக்கு மேலும் ஊக்கமாக அமையும்.எல்லோருக்கும் வாழ்த்துகள்.

NIZAMUDEEN said...

நல்ல அறிமுகங்கள், சுவைபட இருந்தன

விக்கியுலகம் said...

என்னையும் ஒரு பதிவராக மதித்து அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் மாப்ளே...அனைவருக்கும் மற்றும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

புதிய பதிவர்கள் யாவருக்கும் எனது வாழ்த்துக்களும் வந்தனங்ககளும், வாங்க வந்து கலக்குங்க...!!!

MANO நாஞ்சில் மனோ said...

மிக்க நன்றி சம்பத்குமார்...

தனிமரம் said...

பலரையும் பல்சுவைப் பதிவு வலையாளர்களை நல்ல முறையில் அறிமுகம் செய்தீர்கள். வாழ்த்துக்கள்.

இரவு வானம் said...

புதிய பதிவர்கள் அறிமுகம் அனைத்தும் சிறப்பு, அனைவருமே எனக்கு புதியவர்கள், பகிர்விற்கு நன்றி, முந்தைய பதிவில் என்னையும் அறிமுகபடுத்தி இருந்தீர்கள், அதற்கும் நன்றி

ஹாலிவுட்ரசிகன் said...

அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

சே.குமார் said...

நல்ல அறிமுகங்கள்...

அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Lakshmi said...

"பல்சுவை பதிவர்கள்"பகிர்வுகளுக்குப் பராட்டுக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரே பதிவில் இத்தனைப்பேறா..?

அமர்க்களம் தொடருங்கள...

ஈரோடு தங்கதுரை said...

என்னை அறிமுகப்படுதியதற்கு மிக்க நன்றி. இது போன்ற அறிமுகங்கள் அனைவருக்கும் ஊக்கம் தரும். வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல ..!

வீடு K.S.சுரேஸ்குமார் said...

அனைத்தும் சிறப்பான அறிமுகங்கள் அதுவும் அன்பு மித்ரா பிளாக்கில் டைரி மாதிரி எழுதியிருப்பது...சுவாரஸ்யமாக உள்ளது நல்ல அறிமுகங்கள்!

NAAI-NAKKS said...

நன்றி சம்பத்....
கழுகிர்காக....

கழுகு இன்னும் உயரே பறக்கும்...

S.V.SAIBABA said...

மிக்க நன்றி சம்பத்குமார்.இது போன்ற அறிமுகங்கள் அனைவருக்கும் ஊக்கம் தரும்.அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மதுமதி said...

அனைவருக்கும் வாழ்த்துகள் இறுதி பதிவை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.

அகிலா said...

என்னை அறிமுகபடுத்தியதற்கு நன்றி.....

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தொகுப்பு ! அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

ஜெய்லானி said...

ஏகப்பட்ட அறிமுகங்கள் :-))வாழ்த்துக்கள்

ராசை நேத்திரன் said...

மிக்க நன்றி தமிழ் கூறும் நல் உலகில் என்னை உங்கள் பதிவர்கள் மத்தியில் அறிமுக படுத்தியமைக்கு நன்றி... என்றும் நன்றிகள் இவன் செந்தில்குமார்@ ராசை நேத்திரன் www.ammavirku.blogspot.com

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பரவால்ல நம்மையும் இன்னும் ஞாபகம் வெச்சி அறிமுகப்படுத்துறாங்க... அதுவும் பிரபல பதிவர்களோட சேர்த்து....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அறிமுகப்படுத்தப்பட்ட பழைய புதிய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள், பெரும்பாலான புதிய பதிவர்கள் எனக்கும் புதியவர்கள்தான்.

kavithai (kovaikkavi) said...

தங்கள் இன்றைய அறிமுகங்களிற்கும் தங்களிற்கும் வாழ்த்துகள் பணி தொடர.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

சம்பத்குமார் said...

@ மகேந்திரன் said...

மிக்க நன்றி நண்பரே

சம்பத்குமார் said...

@ சி.பி.செந்தில்குமார்

மிக்க நன்றி நண்பரே

தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம்

சம்பத்குமார் said...

@ இராஜராஜேஸ்வரி

மிக்க நன்றி சகோதரி

சம்பத்குமார் said...

@ koodal bala said...

//இந்த சிறியவனுக்கும் இடமளித்தமைக்கு நன்றி !//

மிக்க நன்றி நண்பரே

சம்பத்குமார் said...

@ கோகுல் said...
//பதிவுலகஅனுபவசாலிகளின் மத்தியில் புதியவர்களை அறிமுகப்படுத்துவது அவர்களுக்கு மேலும் ஊக்கமாக அமையும்.எல்லோருக்கும் வாழ்த்துகள்.//

மிக்க நன்றி கோகுல்

சம்பத்குமார் said...

@NIZAMUDEEN said...
//நல்ல அறிமுகங்கள், சுவைபட //இருந்தன//

மிக்க நன்றி நன்பரே

சம்பத்குமார் said...

@ விக்கியுலகம் said...
//என்னையும் ஒரு பதிவராக மதித்து அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் மாப்ளே...அனைவருக்கும் மற்றும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!//

வணக்கம் மாம்ஸ்

தொடரட்டும் உங்கள் வெற்றீப்பயணம்

சம்பத்குமார் said...

@MANO நாஞ்சில் மனோ said...

//மிக்க நன்றி சம்பத்குமார்...//

மிக்க நன்றி அண்ணாச்சி

சம்பத்குமார் said...

@தனிமரம் said...

//பலரையும் பல்சுவைப் பதிவு வலையாளர்களை நல்ல முறையில் அறிமுகம் செய்தீர்கள். வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி தோழரே

சம்பத்குமார் said...

@ இரவு வானம் said...

//புதிய பதிவர்கள் அறிமுகம் அனைத்தும் சிறப்பு, அனைவருமே எனக்கு புதியவர்கள், பகிர்விற்கு நன்றி, முந்தைய பதிவில் என்னையும் அறிமுகபடுத்தி இருந்தீர்கள், அதற்கும் நன்றி//

மிக்க நன்றி திரு.சுரேஷ் அவர்களே

சம்பத்குமார் said...

@ஹாலிவுட்ரசிகன் said...

//அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பரே

சம்பத்குமார் said...

@சே.குமார் said...

//நல்ல அறிமுகங்கள்...

அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி நண்பரே

சம்பத்குமார் said...

@Lakshmi said...

//"பல்சுவை பதிவர்கள்"பகிர்வுகளுக்குப் பராட்டுக்கள்//

மிக்க நன்றி அம்மா

சம்பத்குமார் said...

@கவிதை வீதி... // சௌந்தர் // said...

//ஒரே பதிவில் இத்தனைப்பேறா..?

அமர்க்களம் தொடருங்கள...//

நன்றி நண்பரே

தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம்

சம்பத்குமார் said...

@ஈரோடு தங்கதுரை said...

//என்னை அறிமுகப்படுதியதற்கு மிக்க நன்றி. இது போன்ற அறிமுகங்கள் அனைவருக்கும் ஊக்கம் தரும். வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல ..!//

மிக்க நன்றி நண்பரே

சம்பத்குமார் said...

@வீடு K.S.சுரேஸ்குமார் said...

//அனைத்தும் சிறப்பான அறிமுகங்கள் அதுவும் அன்பு மித்ரா பிளாக்கில் டைரி மாதிரி எழுதியிருப்பது...சுவாரஸ்யமாக உள்ளது நல்ல அறிமுகங்கள்!//

மிக்க நன்றி சுரேஷ்

சம்பத்குமார் said...

@NAAI-NAKKS said...

//நன்றி சம்பத்....
கழுகிர்காக....

கழுகு இன்னும் உயரே பறக்கும்...//

மிக்க நன்றீ நண்பரே

வெற்றி பயணம் தொடரட்டும்

சம்பத்குமார் said...

@S.V.SAIBABA said...

//மிக்க நன்றி சம்பத்குமார்.இது போன்ற அறிமுகங்கள் அனைவருக்கும் ஊக்கம் தரும்.அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ஐயா

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

சம்பத்குமார் said...

@மதுமதி said...

//அனைவருக்கும் வாழ்த்துகள் இறுதி பதிவை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.//

மிக்க நன்றி நண்பரே

சம்பத்குமார் said...

@அகிலா said...

//என்னை அறிமுகபடுத்தியதற்கு நன்றி.....//

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி

சம்பத்குமார் said...

@ண்டுக்கல் தனபாலன் said...

//நல்ல தொகுப்பு ! அனைவருக்கும் வாழ்த்துக்கள் !//

நன்றி நண்பரே

சம்பத்குமார் said...

@ஜெய்லானி said...

//ஏகப்பட்ட அறிமுகங்கள் :-))வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி சகோ

சம்பத்குமார் said...

@ராசை நேத்திரன் said...

//மிக்க நன்றி தமிழ் கூறும் நல் உலகில் என்னை உங்கள் பதிவர்கள் மத்தியில் அறிமுக படுத்தியமைக்கு நன்றி... என்றும் நன்றிகள் இவன் செந்தில்குமார்@ ராசை நேத்திரன் www.ammavirku.blogspot.com//

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரா

சம்பத்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said...

//அறிமுகப்படுத்தப்பட்ட பழைய புதிய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள், பெரும்பாலான புதிய பதிவர்கள் எனக்கும் புதியவர்கள்தான்.//

வணக்கம் நண்பரே

தொடர்ந்து கலக்குங்க

மனமார்ந்த வாழ்த்துக்கள்

சம்பத்குமார் said...

@kavithai (kovaikkavi) said...

//தங்கள் இன்றைய அறிமுகங்களிற்கும் தங்களிற்கும் வாழ்த்துகள் பணி தொடர.
வேதா. இலங்காதிலகம்.//

மிக்க நன்றி சகோதரி

தமிழ்வாசி பிரகாஷ் said...

என்னையும் குறிப்பிட்டு பகிர்ந்தமைக்கு நன்றி சம்பத்....

புதிய, பழைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

! சிவகுமார் ! said...

அனைவருக்கும் வாழ்த்துகள்!!

மாதேவி said...

பல்சுவை பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

என்னையும் பிரபல (!!!!) பதிவர்களுக்கு இணையாக அறிமுக படுத்தியமைக்கு நன்றி .
(இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது ?)

FOOD NELLAI said...

அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றி.

மோகன் குமார் said...

என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி சம்பத் குமார்; தங்களின் உழைப்பு வியக்க வைக்கிறது

Kanmani said...

அறிமுகத்திற்கு நன்றி! என் போல் புதிதாக எழுதத் தொடங்கியிருப்பவர்களுக்கு, ஊக்கமே அவசியம். அதைத் தந்தமைக்கு மிக்க நன்றி.

http://kanmani-anbodu.blogspot.in/

athira said...

அடடா ஒரே மூச்சில் இவ்ளோ பெரை அறுமுகப்படுத்திக் கலக்கிட்டீங்க... வாழ்த்துக்கள் தொடருங்கோ.

thariq ahamed said...

thanks brother

துரைடேனியல் said...

அசத்தலான அறிமுகங்கள். நன்றி.

தம 12.

நிரூபன் said...

வணக்கம் நண்பா,

பல தோழர்களோடு, சிறியேனையும் அறிமுகப்படுத்தியிருப்பதற்கு நன்றிகள்.

Lakshmi said...

"பல்சுவை பதிவர்கள்"பகிர்வுகளுக்குப் பராட்டுக்கள்.

உழவன் ராஜா said...

உங்கள் வலைசரத்தில் இந்த சிறியவனுக்கும் ஒரு இடமளித்து என்னையும் ஒரு பதிவராக மதித்து அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தோழா...இது என்னை மேலும் உற்சாக படுத்தும்..நன்றி தோழா..

R.Gopi said...

//அட்ராசக்க வலைத்தளம் நடத்தும் அண்ணன் சிபிதான் இன்றுவரை பதிவர் நம்பர் ஒன்//

அப்படியா தலைவா?

இது யாரு சொன்னது, நீங்களேவா?

சம்பத்குமார் said...

@தமிழ்வாசி பிரகாஷ் said...

//என்னையும் குறிப்பிட்டு பகிர்ந்தமைக்கு நன்றி சம்பத்....

புதிய, பழைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

நன்றி பிரகாஷ்

சம்பத்குமார் said...

@! சிவகுமார் ! said...

//அனைவருக்கும் வாழ்த்துகள்!!//

நன்றி சிவா

சம்பத்குமார் said...

@மாதேவி said...

//பல்சுவை பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.//

நன்றி சகோ

சம்பத்குமார் said...

@"என் ராஜபாட்டை"- ராஜா said...

//என்னையும் பிரபல (!!!!) பதிவர்களுக்கு இணையாக அறிமுக படுத்தியமைக்கு நன்றி .
(இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது ?)//

ஹா ஹா ஹா

மிக்க நன்றி சகோ

சம்பத்குமார் said...

@FOOD NELLAI said...

//அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றி.//

மிக்க நன்றி சகோ

சம்பத்குமார் said...

@மோகன் குமார் said...

//என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி சம்பத் குமார்; தங்களின் உழைப்பு வியக்க வைக்கிறது//

மிக்க நன்றி நன்பரே

சம்பத்குமார் said...

@Kanmani said...

//அறிமுகத்திற்கு நன்றி! என் போல் புதிதாக எழுதத் தொடங்கியிருப்பவர்களுக்கு, ஊக்கமே அவசியம். அதைத் தந்தமைக்கு மிக்க நன்றி.//

நன்றி சகோ

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

சம்பத்குமார் said...

@athira said...

//அடடா ஒரே மூச்சில் இவ்ளோ பெரை அறுமுகப்படுத்திக் கலக்கிட்டீங்க... வாழ்த்துக்கள் தொடருங்கோ.//

நன்றி சகோ

சம்பத்குமார் said...

@thariq ahamed said...

//thanks brother//

நன்றி நண்பரே

சம்பத்குமார் said...

@துரைடேனியல் said...

//அசத்தலான அறிமுகங்கள். நன்றி. //

நன்றி நண்பரே

சம்பத்குமார் said...

@நிரூபன் said...

//வணக்கம் நண்பா,

பல தோழர்களோடு, சிறியேனையும் அறிமுகப்படுத்தியிருப்பதற்கு நன்றிகள்.//

வணக்கம் நிரூ

தொடர்ந்து கலக்குங்க

சம்பத்குமார் said...

@உழவன் ராஜா said...

//உங்கள் வலைசரத்தில் இந்த சிறியவனுக்கும் ஒரு இடமளித்து என்னையும் ஒரு பதிவராக மதித்து அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தோழா...இது என்னை மேலும் உற்சாக படுத்தும்..நன்றி தோழா..//

மிக்க நன்றி நன்பா

மித்ரா அம்மா said...

அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே !!

Raja Natarajan said...

சிறந்த தொகுப்பு
நன்றி
www.nathikarai.in

Sankar Ganesh said...

நன்றி நண்பரே!.. எத்தனையோ தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் இவ்வடியேனையும் அறிமுகப்படுத்திய உங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றி..

There was an error in this gadget

மகளிர் சக்தி

தமிழ் மணத்தில் - தற்பொழுது