07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 1, 2015

வலைச்சரம் - ஏழாம் நாள்- பதிவர்கள் புத்தகங்கள் - சிறு அறிமுகம்

இப்புத்தாண்டில் என் நூலகக் காட்டில் அடைமழை!

அன்பளிப்பாக பெற்ற நூல்கள் சில!  புத்தகக் காட்சியில் வாங்கியவை பல.

என் அலமாரியில் புதிதாக இடம் பெற்றவைகளுள், பதிவர்களின் நூல்களை மட்டும் சிறு அறிமுகம் செய்வதே, இன்றைய பதிவின் நோக்கம்.

முழுமையாக வாசித்த பின்னர், இவை பற்றிய பார்வையை, என் வலைப்பூவான ஊஞ்சலில் வெளியிட எண்ணியிருக்கிறேன்.

தம் எழுத்தை அச்சில் பார்க்க வேண்டும் என்ற எழுத்தாளருக்கேயுரிய தணியாத வேட்கையால், தம் சொந்தப் பணத்தைச் செலவழித்தாவது, பல சிரமங்களுக்கிடையில், புத்தக வெளியீடு செய்யும் பதிவர்களை ஊக்குவிக்க வேண்டியே இப்பதிவு.

புத்தகம் வாங்குவதில் மட்டும் கடுமையான கஞ்சத்தனத்தைச் கடைபிடிக்கும்  நம்மவர்கள்,  இப்பதிவைப் பார்த்த பிறகு,  ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கினால் கூட என் நோக்கம் நிறைவேறும்.


1. என்றாவது ஒரு நாள்ஆஸ்திரேலிய மொழி பெயர்ப்புச்  சிறுகதைகள்
ஆசிரியர்:-   கீதா மதிவாணன் 
வலைப்பூ:- கீதமஞ்சரி
முதற் பதிப்பு  டிசம்பர் 2014  விலை:- ரூ.150/- 
மூலம் ஹென்றி லாசன் (Henry Lawson) 

(காடுகளில் வீடுகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்த முன்னாள் கைதிகளும், சுரங்கத்துக்குள் தங்கள் அதிர்ஷ்டத்தைத் தேடிக் கொண்டிருந்தவர்களும் தாம், ஹென்றி லாசனின் கதை மாந்தர்கள்.    நமக்கு முற்றிலும் புதுமையானதும், பரிச்சயமில்லாததுமான இந்த ஆஸ்திரேலிய காடுறை மனிதர்களின் கதைகளைச் சரளமான நடையில், மொழியாக்கம் என்று தெரியாதவாறு படைத்திருப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் ஆசிரியர். 
களமும், கருவும் தமிழுக்குப் புதிது.  வல்லமை இணைய இதழின் வல்லமையாளராகத் தேர்வு பெற்றவர்.  அவ்விதழ் நடத்திய கடித இலக்கியப்போட்டி, என் பார்வையில் கண்ணதாசன் போட்டி ஆகியவற்றில்  வென்ற பரிசுகள், இவரது இலக்கியத் தரமான எழுத்துத் திறமைக்குச் சான்று பகர்வன.)


2. அம்மாவின் தேன்குழல் -  சிறுகதைகள்
ஆசிரியர்:-  மாதவன் இளங்கோ 
வெளியீடு:-  அகநாழி பதிப்பகம் சென்னை  முதற்பதிப்பு:- டிசம்பர் 2014  விலை ரூ.130/-

(வல்லமை நடத்திய சிறுகதைப் போட்டியில் இலக்கிய விமர்சகர் வெ.சாமிநாதன், எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஆகியோரால் இவரது கதைகள் சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவரும் வல்லமை இதழின் வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.)





3. தாயுமானவள்  -  சிறுகதைகள்-  வானதி பதிப்பகம் சென்னை முதற்பதிப்பு:-ஆகஸ்டு 2009  விலை ரூ45/-
4.  வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள்  -  சிறுகதைகள் -திருவரசு புத்தக நிலையம் சென்னை.  முதற்பதிப்பு ஆகஸ்டு 2009 விலை ரூ.35/-
5.  எங்கெங்கும் எப்போதும் என்னோடு  - சிறுகதைகள் - மணிமேகலைப் பிரசுரம்  முதற்பதிப்பு 2010  விலை ரூ.55/-
இவை மூன்றின் ஆசிரியர்:- வை.கோபாலகிருஷ்ணன்  
(பதிவுலகில் பிரபலமான இவர், நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரர்.   கடந்த ஆண்டு பத்து மாதங்கள் வெற்றிகரமாகத் தொடர்ந்து இவர் நடத்திய சிறுகதை விமர்சனப்போட்டி பதிவுலகில் பிரசித்தி பெற்றது. 
முதல் நூல் பழனியம்மாள் அரங்கநாதன் தமிழிலக்கிய அறக்கட்டளை,பாரதி தமிழ்ச்சங்கம் &  திருக்குறள் பேரவையால் முதற்பரிசு பெற்றது.  இரண்டாவது திருச்சி மாவட்ட பொதுநலப்பணி நிதிக்குழுவால் மாவட்ட அளவில் 2009 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் பரிசு பெற்றது.மூன்றாவது புத்தகமான 'எங்கெங்கும், எப்போது, என்னோடு' உரத்த சிந்தனை எனும் தன்னம்பிக்கையூட்டும் மாத இதழால் முதல் பரிசுக்குத் தேர்வானது.  பிரபல நடிகர் டெல்லி கணேஷ் இந்தப் பரிசை 15/05/2011 ல் சென்னையில் நடைபெற்ற விழாவில் கொடுத்தார்.  இவ்விழா பற்றிய விபரங்கள் படங்களுடன் இங்கே:-http://gopu1949.blogspot.in/2011/07/4.html- )



6.  கவியரசு கண்ணதாசன் பாடல்கள் -  காலத்தின் பதிவுகள்
ஆசிரியர்:  கவிஞர் காவிரிமைந்தன்
இவரது தளம்:-  தமிழ் நதி
வெளியீடு கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம், சென்னை
முதற்பதிப்பு:-  அக்டோபர் 2006
விலை: ரூ 70/-
(கவிஞர் கண்ணதாசனுக்குச் சென்னையில் திருவுருவச்சிலை அமையக் காரணமானவர்.  கவிஞர்பால் மாளாக்காதல் கொண்டுள்ள இவர் காலத்தின் பதிவுகள் என்னும் தலைப்பில் அகவை எண்பதைக் கவிஞர் கண்ணதாசன் எட்டிய நாளில் எண்பது கவிதைகளைக் கட்டுரையாகவும் ஆய்வாகவும் எடுத்துக் கண்டிருக்கிறார் என்று கவிஞர் வாலி வாழ்த்துரையில் கூறுகிறார்.  தமிழ்நதியோடு வல்லமையிலும்  தொடர்ந்து எழுதி வருகிறார்)     




7.  ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்  -  கவிதைகள்
ஆசிரியர்:-  உமா மோகன்
வலைப்பூ:- குரல்
முதற்பதிப்பு:- டிசம்பர் 2014
விலை:-  ரூ70/-
(இவரது கவிதைகளில் பாரதி, பாவேந்தர் மூச்சுக்காற்று படிந்துள்ளது; கால்களில் இந்த மகாகவிகள் மிதித்த புழுதி மண்.  புதுவை எனும் பூஞ்சோலையின் மண் மகளாய், இரண்டாவது பூக்கூடை ஏந்தி.  இவரது கவிதைகள் கார்பரேட், கணிணி யுகச் சூறாவளிக்கு நடுவேயும் அடக்கமான இனிய வாழ்க்கை உண்டு என்பதைக் காட்சிப் படுத்தும் வண்ணக்கவிதைகள் என்கிறார் கவிஞர் புவியரசு.  எழுதிய பிற நூல்கள் டார்வின் படிக்காத குருவி & வெயில் புராணம்.) 




8.  சிறகு விரிந்தது  -  கவிதைகள்
ஆசிரியர்:-  சாந்தி மாரியப்பன்
வலைப்பூ:  அமைதிச்சாரல்
முதற்பதிப்பு:-  ஜனவரி 2014  விலை ரூ80/-
(சாந்தி மாரியப்பனின் கவிதைகள் மனசாட்சியுடன் கூடிய காலத்தின் சாட்சியாக ஒளிருகின்றன.  அன்றாட வாழ்வில் கவனிக்கத்தவறும் நுணுக்கமான கூறுகள், எளிய நிகழ்வுகளில் உள்ள அழகியல், மனிதர்களின் பல்வகை உணர்வு வெளிப்பாடு என தனித்துவம் வாய்ந்த பார்வையுடன் புதிய கோணங்களில் நவீன வாழ்வை வெளிப்படுத்துபவை இவை என்கிறார், வல்லமையின் நிறுவனர் அண்ணா கண்ணன்.)




9.  இலைகள் பழுக்காத உலகம் -  கவிதைகள்
ஆசிரியர்:- ராமலெஷ்மி
வலைத்தளம்:-  முத்துச்சரம்
முதற்பதிப்பு:- ஜனவரி 2014  விலை ரூ 80/-
(அன்பு, பரிவு, நேசம் இவைகளுக்காக ஏங்கும் மனிதருக்குத் தமது பேரன்பைக் கவிதையெனக் கொட்டிக்கொடுக்கிறார்கள் கவிஞர்கள். கவிதை மரத்தில் இலைகள் ஒரு நாளும் பழுப்பதில்லை;  அப்போது தான் விடிந்த விடியலின் வாசனையோடும், பிறந்த குழந்தையின் எதிர்பார்ப்போடும் அது  காத்திருக்கிறது.  அப்படியான இலைகள் பழுக்காத உலகம் ஒன்றை கவிதை பரிசாக நமக்குத் தந்திருக்கிறார் ராமலெஷ்மி என்கிறார் க.அம்சப்பிரியா)




10.  அன்னபட்சி -  கவிதைகள்
ஆசிரியர்:-  தேனம்மை லெஷ்மணன்
வலைப்பூ:- சும்மா
முதற் பதிப்பு:- ஜனவரி 2014  விலை ரூ.80/-
(தேனம்மையின் கவிதைகள் சமூகப்பார்வை, தனிமனித அவசங்கள் ஆகிய இரண்டுக்கும் ஒத்த இடம் தந்து, வெவ்வேறு உள்ளடக்கங்களுடன் மலர்ந்திருப்பதால் சங்கத்தில் தூது சென்ற அன்னங்களும், நீரை ஒதுக்கிப் பாலை மட்டும் பருகும் அன்னங்களும் நம் நெஞ்சில் நிலைத்திருப்பது போலத் இவரது அன்னபட்சியிலிருக்கும் அருமையான சொல்லாட்சிகளும் பொருள் நுட்பங்களும், நம் உள்ளங்களில் என்றென்றும் கல்வெட்டாய் உறைந்திருக்கும் என்கிறார் எம்.ஏ.சுசீலா.)   





11.  யாருடைய எலிகள் நாம்? -  கட்டுரைகள்
ஆசிரியர்:- சமஸ்
வலைத்தளம்:- சமஸ்
வெளியீடு:- துளி   thuliveliyeedu@gmail.com
முதற்பதிப்பு:- டிசம்பர் 2014  விலை ரூ.300
(சமஸுடைய மொழிநடை அபூர்வமானது.  ஆழமான ஆற்றை மேலே நின்று பார்த்தால் அது ஓடுவதே தெரியாது.  அது போலத்தான் சமஸுடைய எழுத்தும்.  ஆர்ப்பாட்டமில்லாமல் ஆழத்தில் பாயும். அ.முத்துலிங்கம்)
மேலே குறிப்பிட்டவைகளுள் ஆறு புத்தகங்கள் அகநாழிகை பதிப்பகம் வெளியீடு.  இதன் பதிப்பாளர் பொன்.வாசுதேவன் அவர்களும் சிறந்த எழுத்தாளராக விளங்குகிறார். 
அண்மையில் இவரது சாம்பல் வாசனைசிறுகதையை வாசித்தேன்.  சாவுக்குச் செல்பவனின் மனவோட்டத்தைத் தேர்ந்த நடையில் கதையாக்கித் தந்திருக்கிறார். 
அவரது வலைத்தளம்:-      அகநாழிகை பொன் வாசுதேவன்             சரி நண்பர்களே!  ஒரு விதத் தயக்கத்துடனே ஆசிரியப் பொறுப்பை ஏற்ற என்னை, இந்த ஒரு வாரமும் என்னுடன் கூடவே பயணித்துத் தினமும் கருத்துக்கள் மூலம் ஊக்கமும் உற்சாகமும் அளித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

கிடைத்த நேரத்தில் என்னால் முடிந்தவரை இப்பணியைச் செய்தேன் என்பதில் எனக்குத் திருப்தியே.  தொகுப்புக்காக வலைப்பூக்கள் பலவற்றிக்குப் போய் வாசித்ததில் பலருடைய எழுத்து எனக்குப் பரிச்சயமாயிருக்கிறது.  பதிவர்கள் சிலரின் அறிமுகமும் கிடைத்திருக்கிறது.

இப்பணியை நான் ஏற்கக் காரணமான திரு கோபு சார் அவர்களுக்கும் திரு சீனா சார் அவர்களுக்கும், திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி கூறி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். 

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூபனின் எழுத்துப் படைப்பு வலைத்தளத்தில் நடைபெறவிருக்கும் உலகளாவிய சிறுகதை போட்டிக்கான இறுதி நாள் 15/02/2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு போட்டியைச் சிறப்பியுங்கள்.   

நன்றியுடன்,

ஞா.கலையரசி

51 comments:

  1. நல்ல நூல் அறிமுகத்துடன் அழகான பதிவு!..
    அன்பின் நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..

    வாரம் முழுதும் வலைச்சரத்தினை வண்ணமயமாகத் தொகுத்து வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் முதல் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி துரை சார்! ஒரு வாரமும் தொடர்ந்து வந்து ஊக்கம் கொடுத்தமைக்கு மீண்டும் என் நன்றி!

      Delete
  2. தங்கள் எழுத்துக்களை அச்சில் பார்க்கவேண்டும் என்பது ஒவ்வொரு எழுத்தாளனின் கனவு. அச்சில் பார்த்தபின் எழும் மகிழ்ச்சியை விஞ்சிடும் அதைப் பற்றிப் பேசப்படுவதில் எழும் அதீத மகிழ்ச்சி. இங்கு மற்றப் பதிவர்களின் படைப்புகளுடன் என்னுடையதும் இருக்கக்கண்டு மனம் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறது. மற்றப் பதிவர்களுக்கும் ஊக்கமளிக்கும் விதமாய் புத்தகங்களை முன்னுரைகளுடன் அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பு. மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும் அக்கா. அனைத்துப் பதிவர்களுக்கும் அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி கீதா!

      Delete
  3. அஹா எதிர்பாராமல் இன்ப அதிர்ச்சி. மிக்க நன்றி கலையரசி.

    மிக அழகாக ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி இருக்கின்றீர்கள். கீதா சொன்னதை வழி மொழிகிறேன். ///தங்கள் எழுத்துக்களை அச்சில் பார்க்கவேண்டும் என்பது ஒவ்வொரு எழுத்தாளனின் கனவு. அச்சில் பார்த்தபின் எழும் மகிழ்ச்சியை விஞ்சிடும் அதைப் பற்றிப் பேசப்படுவதில் எழும் அதீத மகிழ்ச்சி. இங்கு மற்றப் பதிவர்களின் படைப்புகளுடன் என்னுடையதும் இருக்கக்கண்டு மனம் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறது. மற்றப் பதிவர்களுக்கும் ஊக்கமளிக்கும் விதமாய் புத்தகங்களை முன்னுரைகளுடன் அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பு. மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும் அக்கா. அனைத்துப் பதிவர்களுக்கும் அன்பான வாழ்த்துகள். /// நான் நினைத்த வார்த்தைகளை எல்லாம் சொல்லி இருக்கிறார்.

    அன்பும் நன்றியும். :)

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. வருகைக்கும், அன்புக்கும் நன்றி தேனம்மை!

      Delete
  4. நூல் அறிமுகத்துடன் சிறப்பான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன் சார்!

      Delete
  5. வணக்கம்
    நூலாசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு எனது பாராட்டக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் நடத்தும் சிறுகதைப் போட்டியைப் பற்றிச் சொல்லவேண்டும் என நினைத்திருந்தேன். விடுபட்டுப் போய் விட்டது. இப்போது சேர்த்து விட்டேன். பாராட்டுக்கு மிக்க நன்றி ரூபன்!

      Delete
  6. இத்தனை நூல்களையும்...விபரமாக அறிய தந்தமைக்கு நன்றி.
    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
    சிறப்பான தங்களின் ஆசியப்பணிக்கு வாழ்த்துக்களும். பாராட்டுக்களும்
    சகோ. நன்றி

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்நன்றி காயத்ரி! வலைச்சரப் பொறுப்பேற்கும் தங்களுக்கு இனிய வாழ்த்து!

      Delete
  7. பதிவர்களின் நூல்களை அறிமுகபடுத்தியது அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி கோமதி! உங்களின் தொடர்ந்த ஊக்கத்துக்கு மீண்டும் என் நன்றி!

      Delete
  8. பதிவுகள் என்னும் படையுடன் புறப்பட்டு
    தேன் சிட்டாய் அதை வென்று! பணியில்
    வெற்றி மாலையை சூடிய பின்பு,
    விடை பெற்று செல்லும் வலைச்சரம் ஆசிரியர்
    சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களுக்கு
    குழலின்னிசையின் பாராட்டுக்கள் மற்றும்
    மனம் நிறைந்த நன்றிகள்!
    இன்றைய பதிவாளர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!
    பதிவர்களின் நூல்கள் அறிமுகம் வரவேற்புக்குரிய வசந்தம்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஒரு வாரமும் தவறாமல் வந்து சிறப்பான பின்னூட்டமளித்து ஊக்கமும் உற்சாமுகம் அளித்தமைக்கு மிகவும் நன்றி வேலு சார்!

      Delete
  9. பதிவராய் இருந்து எழுத்தளராய் மிளிரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முரளிதரன்!

      Delete
  10. தங்களின் இன்றைய வலைச்சரத் தலைப்பும், பதிவும், அடையாளம் காட்டி அறிமுகம் செய்துள்ள விதமும், இதுவரை யாருமே செய்யாத புதுமையாகவும், முதலில் காட்டியுள்ள மஞ்சள்பூ போலவும், தங்களின் PROFILE PHOTO பறவையின் நிறம் போலவும் வெகு அழகாகவும், திருப்தியாகவும் அமைந்துள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. புதுமை என அறிந்து மிகவும் மகிழ்கிறேன் சார்! பாராட்டுக்கு மிக்க நன்றி!

      Delete
  11. //என் அலமாரியில் புதிதாக இடம் பெற்றவைகளுள், பதிவர்களின் நூல்களை மட்டும் சிறு அறிமுகம் செய்வதே, இன்றைய பதிவின் நோக்கம்.//

    ஆஹா, தங்களின் அலமாரியில் நான் இதுவரை வெளியிட்டுள்ள மூன்று ’சிறுகதைத் தொகுப்பு நூல்’களும் இடம்பெற்றுள்ளதைக் கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு அடியேன் என்ன பாக்யம்/தவம் செய்தேனோ ! :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. மூன்று தொகுதிகளுக்குமே பரிசு வாங்கிய உங்கள் புத்தகங்கள் இடம் பெற என் அலமாரி தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

      Delete
  12. //முழுமையாக வாசித்த பின்னர், இவை பற்றிய பார்வையை, என் வலைப்பூவான ஊஞ்சலில் வெளியிட எண்ணியிருக்கிறேன்.//

    ஹைய்யோ ! இதைக்கேட்க ......

    இன்பத்தேன் வந்து பாயுது ..... என் காதினிலே ! :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நேரங் கிடைக்கும் போது கண்டிப்பாக எழுதுவேன் சார்!

      Delete
  13. //தம் எழுத்தை அச்சில் பார்க்க வேண்டும் என்ற எழுத்தாளருக்கேயுரிய தணியாத வேட்கையால், தம் சொந்தப் பணத்தைச் செலவழித்தாவது, பல சிரமங்களுக்கிடையில், புத்தக வெளியீடு செய்யும் பதிவர்களை ஊக்குவிக்க வேண்டியே இப்பதிவு.//

    மிகவும் நல்ல உயர்ந்த நோக்கமே.

    எனக்கும் இந்த நூல்கள் வெளியீட்டினால் இதுவரை ரூ. 90000/- [Rupees Ninety Thousands only] செலவானது. இருப்பினும் அடியேன் வியாபார நோக்கமாக இவற்றை வெளியிடவே இல்லை.

    ஒவ்வொறு சிறுகதைத்தொகுப்பு நூலிலும் 300 பிரதிகள் வீதம் நானே பிரசுரத்தாரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி, என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் கையொப்பத்துடனும், ஒரு சுய விலாசமிட்ட அஞ்சல் அட்டையுடனும், அன்பளிப்பாக மட்டுமே கொடுத்துள்ளேன்.

    அதுபற்றிய விபரங்கள் இதோ இந்தப்பதிவினில் உள்ளன:
    http://gopu1949.blogspot.in/2011/07/1.html

    சுய விலாசமிட்ட அஞ்சல் அட்டை அவர்கள் படித்தபிறகு அவர்களின் கருத்துக்களை நான் அறிய மட்டுமே என்னால் கொடுக்கப்பட்டன.

    அவ்வாறு கிடைக்கப்பெற்ற மிக முக்கியமானதொரு கடிதம் இதோ இந்தப்பதிவினில் இறுதியாகக் காட்டியுள்ளேன்.
    http://gopu1949.blogspot.in/2013/03/3.html அவசியம் பாருங்கோ.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ரூ 900000 செலவானாலும் நம் புத்தகத்தை அச்சில் பார்க்கும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மேலும் உங்கள் புத்தகங்கள் பரிசுகளைப் பெற்றுத் தந்த போது கிடைத்த அளவிலா ஆனந்தத்துக்கு முன் ரூ 90000/- மிகச் சிறிய தொகையே. நீங்கள் குறிப்பிட்ட பதிவினை அவசியம் வாசித்துக் கருத்துத் தெரிவிப்பேன்.

      Delete
  14. ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன்,
    ’அமைதிச்சாரல்’ திருமதி. சாந்தி மாரியப்பன்,
    ’சும்மா’ திருமதி தேனம்மை லெக்ஷ்மணன்,
    ’முத்துச்சரம்’ திருமதி ராமலக்ஷ்மி

    போன்ற எனக்கு சற்றே அறிமுகம் ஆகி இன்றும் என் தொடர்பு எல்லைக்குள் உள்ள வலையுலக+எழுத்துலகப் பிரபலங்களுடன் என் நூல்களும் இங்கு இந்தப்பதிவினில் இடம்பெற்றுள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மகிழ்ச்சியை அறிந்து எனக்கும் மகிழ்ச்சி சார்! பதிவுலகில் நீங்களும் மிகவும் பிரபலமானவர் தான், அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

      Delete
  15. இதுவரையில் நூறினைத் தாண்டியுள்ள என்னுடைய வலைச்சர அறிமுகங்களில் 108 என்ற சிறப்பு எண்ணுடன் மட்டுமல்லாமல் 108 முதல் 111 வரை தாங்களே அறிமுகம் செய்துள்ளது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    இன்று இரவு நான் வெளியிட உள்ள என் சிறப்புப்பதிவான ‘என் வீட்டுத்தோட்டத்தில் .... நிறைவுப்பகுதி 16 of 16 [101-111] என்பதில், தாங்கள் சிறப்பிடம் பெற உள்ளீர்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சி சார். வலைச்சரப் பணி முடியும் இன்று உங்கள் தோட்டத்தில் எனக்குச் சிறப்பிடம் என்றறிய மிகவும் மகிழ்ச்சி சார். மிகவும் நன்றி சார்!

      Delete
  16. //கிடைத்த நேரத்தில் என்னால் முடிந்தவரை இப்பணியைச் செய்தேன் என்பதில் எனக்குத் திருப்தியே. தொகுப்புக்காக வலைப்பூக்கள் பலவற்றிக்குப் போய் வாசித்ததில் பலருடைய எழுத்து எனக்குப் பரிச்சயமாயிருக்கிறது. பதிவர்கள் சிலரின் அறிமுகமும் கிடைத்திருக்கிறது.//

    பல்வேறு அலுவலக தணிக்கை நெருக்கடிகளுக்கு இடையேயும் மிகச்சிறப்பாகவே செய்து முடித்துள்ளீர்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சார்! தணிக்கை இம்மாதம் வரும் என நான் எதிர்பார்க்கவில்லையாததால் நேர நெருக்கடி ஏற்பட்டு விட்டது. அதனால் ஒரு வாரம் என் தூக்கத்தைத் தியாகம் செய்து வலைச்சரப் பணியை முடித்து விட்டேன். பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சார்!

      Delete
  17. //இப்பணியை நான் ஏற்கக் காரணமான திரு கோபு சார் அவர்களுக்கும் திரு சீனா சார் அவர்களுக்கும், திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி கூறி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.//

    தங்கள் அன்புடன் ஏற்று, சவாலாக எடுத்துக்கொண்டு செய்துள்ள, இந்த ஒப்பற்ற சேவை .... நாங்கள் செய்த பாக்யம் என நினைத்து மகிழ்கின்றோம்.

    இன்றுடன் வலைச்சரத்திலிருந்து தாங்கள் விடைபெறும் நிகழ்ச்சிதான் மனதுக்கு சற்றே வருத்தமாக உள்ளது.

    தங்களுக்கு மீண்டும் மீண்டும் இதே வாய்ப்புகள் பிற்காலத்தில் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களால் அளிக்கப்படும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

    வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வாழ்க என வாழ்த்துவது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வலைச்சரத்தில் விடைபெற்றாலும் என் வலைப்பூவில் தொடர்ந்து எழுதுவேன். நீங்கள் அங்கு வந்து உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

      Delete
  18. என் இன்றைய வலைச்சர அறிமுகத்தில் செய்யப்பட வேண்டிய ஒருசில மிகச்சிறிய திருத்தங்கள் மின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அனுப்பியுள்ளேன். முடிந்தால் அவற்றை மட்டும் சரி செய்து கொடுக்கவும்.

    இன்று அறிமுகம் ஆகி அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைவருக்கும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    நன்றியுடன் கோபு

    ooooo

    ReplyDelete
    Replies
    1. இப்போது நான் சொல்லியிருந்த திருத்தங்கள் எல்லாமே செய்யப்பட்டுள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நன்றியுடன் கோபு

      Delete
    2. திருத்தம் சரி என்றறிய மகிழ்ச்சி சார்.

      Delete
  19. அன்பின் ஞா.கலையரசி அவர்களுக்கு வணக்கம்!

    உங்கள் அலமாரியில் 'அம்மாவின் தேன்குழலும்' இடம்பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வலைச்சரத்தில் என்னுடைய முதல் தொகுப்பை அறிமுகப்படுத்திவைத்தமைக்கு உங்களுக்கு என் நன்றிச்செண்டும், அன்பும்!

    சொல்வனம் இதழ் புத்தக முன்னுரையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. வலைச்சர வாசகர்கள் இங்கே வாசிக்கலாம்:
    http://solvanam.com/?p=37755

    தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பெரும்பாலான புத்தகங்கள் என்னுடைய அலமாரியிலும் இடம்பெற்றுள்ளது. எழுத்தாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!!

    வாழிய நலம்!

    அன்பன்,
    மாதவன் இளங்கோ.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. சொல்வனம் இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி.

      Delete
  20. புத்தக அறிமுகங்கள் அனைத்தும் அருமை! ஆனால் அதில் ஒன்று கூட என்னிடம் இல்லை. அடுத்த முறை புத்தகச்சந்தையில் வாங்க முடியுமா பார்க்கலாம்! த.ம.+

    ReplyDelete
    Replies
    1. பிடித்திருந்தால் இணையம்மூலமே வாங்கலாம் கவிப்பிரியன்! த.ம வாக்குக்கு நன்றி!

      Delete
  21. சிறப்பான அறிமுகம். பாராட்டுகளும் நன்றியும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வாசுதேவன் சார்!

      Delete
  22. சிறப்பான அறிமுகம். பாராட்டுகளும் நன்றியும்.

    ReplyDelete
  23. ஆஹா...மிக மகிழ்ச்சி மேடம் .பெரும்பாலான நூல்களும் என் நூலகத்தில் இடம் பிடித்துவிட்டன ..விட்டுப்போனவற்றை விரைந்து வாங்கிடுவோம்.எனது புதிய நூலுக்கு நல்ல அறிமுகம் தந்தமைக்காகவும் தோழியர் கீதா மதிவாணன் ,தேனம்மை லக்ஷ்மணன் ,ராமலக்ஷ்மி,சாந்தி மாரியப்பன் ஆகியோர் சார்பிலும் நன்றிகள் பல.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமா மேடம்!

      Delete
  24. நூல் அறிமுகங்கள் நன்று.

    வலைச்சரத்தில் சிறப்பாக பணியாற்றிமைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி வெங்கட் சார்!

      Delete
  25. மிக்க மகிழ்ச்சி. நன்றி. அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  26. திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட துணைத்தலைவராக இருந்துவருகிறேன் .மாதந்தோறும் இலக்கிய நூல்கள் அறிமுகம்செய்கிறோம்.என் போன்ற புத்தகபிரியர்களுக்கு தங்களது இந்த நூல் அறிமுகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.சகோதரி தேனம்மைலட்ச்மணணணின் சும்மா மூலம் பல எழுத்தாளர்களின் தொடர்புகிடைத்தது! தங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது