07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 11, 2015

வலைப்பூக்கள் பலவிதம்



வாங்களேன், ராமேஸ்வரம் பக்கமா போய் ஒரு டைவ் அடிச்சு பவளப்பாறைகள பாத்துட்டு வரலாம்...

ஆமா, பவளப்பாறைனா என்ன? மலை மேல இருக்குற மாதிரி இது கடல்ல இருக்குற பாறையா?



ஹஹா... அதெல்லாம் இல்லீங்க, அது ஒரு உயிரினம். இத தனி தனியா பாத்தா கண்ணுக்கே தெரியாம குட்டியா இருக்கும். இதல்லாம் ஆயிரம், இல்ல லெட்சக்கணக்குல ஒண்ணு சேரும் போது, இதெல்லாம் அழகான பவளப் பாறைகளா மாறிப் போகுது.



என்னோட கூட பி.ஜி படிச்ச பையன் இப்ப பவளப் பாறைகள தான் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கான். பவளப் பாறைகள் ஏன் அழியுது, அதோட இனபெருக்கம் எப்படி நடக்குது, அதுகளுக்கு என்னென்ன நோய்கள் வரும் அப்படின்னு எல்லாம் நாம கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்ல...



முக்கியமா கடல் நீர மாசுபடுத்தாம இருந்தா போதும். அடுத்து, அழகுக்காக பவளப் பாறைகள தகர்த்து எடுத்துடுறாங்க. இதனால கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. ஏன், சுனாமி வந்தா நம்மால அலைய சமாளிக்க முடியாம ஏகப்பட்ட உயிரிழப்பு வேற நடந்து போகுது.



இயற்கை எப்பவுமே நமக்கு பாதுகாப்பானது தான்னு நாம நம்பணும். நாம அத பாதுகாத்தா மட்டும் தான் இயற்கை நம்மள பாதுகாக்கும். இல்லனா நம்மள நாமளே அழிச்சுக்குறோம்னு அர்த்தம்...



சரி, காலங்காத்தாலே க்ளாஸ் எடுக்காம, ஒரு குட் மார்னிங் சொல்லிட்டு வலைப்பூக்கள் பக்கமா போய்டுவோம்...



தமிழை மையப்படுத்தி தன்னோட தமிழ் தேன் சுவை தேன்  வலைப்பூவை எழுதிட்டு வரார் குமார். ரா... அழுதும் தொழுதும் அவர் வாசித்து நேசிக்கும் நூல்களில் ரசித்தவற்றையும் அவருள் உதித்தவற்றையும் இணையம் இணைக்கும் என்ற நம்பிக்கையில் பதிவிடுறார்... கல்லூரிக் குறும்புகள், கண்ணன் பாட்டு, தமிழே!தாயே! பண்பாடுன்னு பல தலைப்பின் கீழ எழுதினாலும் தமிழே! தாயே!!  கீழ நிறைய கவிதைகள எழுதியிருக்கார். படிச்சு பாருங்க, கண்டிப்பா பிடிக்கும்.



மலர்விழி ரமேஷ் ரெண்டு வலைபூக்கள் வச்சிருக்காங்க. மலர்ஸ் கிச்சன்ல அவங்க விதம் விதமா சமையல் கத்துக் குடுக்குறாங்க, அதுவும் முடக்கத்தான் கீரை தோசை  எப்படி செய்றதாம்? படிச்சு தெரிஞ்சுக்கோங்க. மலர்விழி ரமேஷோட இன்னொரு வலைப்பூ ஒருத்தியின் பார்வையில் . இங்க தன்னோட மனசுல தோணுற எண்ணங்கள அவரோட பார்வைல அலசியிருக்கார். இவர் குடுத்த சுய ஆலோசனை  என்னன்னு பாப்போமா?



முத்துச்சரம்...  இது ராமலெட்சுமி ராஜன் எழுதிட்டு வர்ற வலைப்பூ. பல இலக்கிய விருதுகளையும் நேர்காணல்களையும் நடத்திட்டு வர்ற இவங்க தன்னோட கவிதை தொகுப்பையும் வெளியிட்டுருக்காங்க. சிறந்த புகைப்பட கலைஞரான இவங்க, தான் அன்றாடம் சந்திக்கும் சாமானியர்களை  புகைப்படமாய் பேச வச்சிருக்காங்க. கண்டிப்பா பாருங்க...



நாச்சியார்ங்குற  வலைப்பூவை எழுதிட்டு வர்றவங்க ரேவதி நரசிம்மன். இவர் தான் பிரான்ஸ் போன அனுபவங்களை ஸ்ட்ராஸ்பர்க் பிரான்ஸ் பயணம் கட்டுரைல குடுத்துருக்கார். கண்டிப்பா எல்லாரும் படிங்க...



கேசவராஜ் ரங்கராஜன்  – வலைப்பூ பெயரும் இது தான், பதிவரின் பெயரும் இது தான். இப்ப தான் பதிவு எழுதவே ஆரம்பிச்சுருக்கார். ஆனாலும் தன்னோட வாழ்க்கைல நடந்த சுவாரசியமான விசயங்கள பதிவா எழுதியிருக்கார். சமீபத்திய ஒரு நிகழ்வுல தன்னோட நிலைபாட்டை எங்கெங்கு காணினும் நிற்பயாங்குற  தலைப்புல சொல்லியிருக்காரு, பாருங்க...



கீதா மதிவாணன் எழுதிட்டு வர்ற வலைப்பூ கீதமஞ்சரி . என் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே! என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே! அப்படின்னு ஆரம்பிக்குற இவங்க என்றாவது ஒருநாள் (மொழிபெயர்ப்பு சிறுகதை) தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தன்னோட வலைப்பூவுல ஏகப்பட்ட விசயங்களை கொடுத்துள்ளார். ஒண்ட வந்த பிடாரிகள்  தலைப்புல விலங்குகளோட வாழ்வியலை விளக்கியிருக்கார்.



ஒரு இன்ஜினியரான அகிலா ஓவிய கலை மேல தணியாத ஆர்வம் கொண்டவர். தன்னோட சின்ன சின்ன சிதறல்கள்  வலைதளத்துல ஆர்வமா எழுதிட்டு வர்றார். நமது தலைநகரில் இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த, அதன் பின்னும் நடந்துக் கொண்டிருக்கிற, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் சுவடுகள் மறையாத நிலைல ஒரு பெண்ணோட பார்வைல மகளிர் தினம் எப்படி இருக்குன்னு சொல்லியிருக்காங்க. கண்டிப்பா படிச்சு பாருங்க.

கல்யாணி சங்கரோட  வலைப்பக்கம் போனா, அவர தேடி வந்த விருதுகள பாக்கலாம். சமீபமா பதிவுகள் எழுதலனாலும் படிக்க படிக்க உற்சாகத்துக்கு குறைவே இருக்காது. இத நீங்க இவங்களோட அக்கு வேறு ஆணி வேறா நான் பாத்த அக்குவேரியம்!!!  பதிவுல இருந்து தெரிஞ்சுக்கலாம்.


சரி, எனக்கு காலேஜ் போக நேரம் ஆகிடுச்சு. அதனால நாளைக்கு இன்னும் சில பதிவர்களோடயும், பதிவுகளோடும் உங்கள சந்திக்குறேன். அதுவரைக்கும் டாட்டா....

.

40 comments:

  1. யம்மா பட்டர்ப்ளை.... முத்துச்சரம் தொடுக்கறவங்க ராமலட்சுமி ராஜன். அதே மாதிரி கீதமஞ்சரிங்கற என் ப்ரெண்ட் பேரு கீதா மதிவாணன். இதை முதல்ல சரி பண்ணிரும்மா. அப்றம் அவங்க வந்து பாத்தா உன் தலைல குட்டுவாங்க. ஹா... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ் நல்லவேளை சொன்னீங்க அண்ணா, இல்லனா நான் பாட்டுக்கு காலேஜ் போயிருப்பேன்... நைட் வந்து பாத்தா ஒரு வேளை என்னை கொத்து பரோட்டா போட்டு வச்சிருந்துப்பாங்க...

      Delete
    2. அச்சச்சோ.. காயத்ரி என்ன எழுதினீங்க என்று தெரியவில்லை. பெயரை மாற்றிப் போட்டிருந்தீங்களோ... என்றாலும் கொத்துபரோட்டாவெல்லாம் போடமாட்டோம். கவலைப்படதீங்க. இங்கு அறிமுகப்படுத்தியிருப்பதே ஒரு மகிழ்வான விஷயம். மிகவும் நன்றி காயத்ரி.

      Delete
    3. எங்களுக்குப் பதில் செல்லக்குட்டு குட்டிய நண்பர் கணேஷ்க்கு அன்பான நன்றி.

      Delete
  2. நம்மள நாமளே பாதி அழிச்சாச்சி...!

    பல விதங்களில் இரு தளங்கள் புதியவை... நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. என்னது, அண்ணாவுக்கே புதுசா? ஹை....ஜாலி

      Delete
  3. மறக்காம வந்துடுங்க...

    http://dindiguldhanabalan.blogspot.com/2015/03/Internal-Audit.html

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா அண்ணா

      Delete
  4. Replies
    1. வாழ்த்துக்கு நன்றி

      Delete
  5. ஒருவர் மட்டும் எனக்கு இதுவரை தெரியாதவர். இப்போஅவரைத் தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி.

    பவளப்பாறைகளை கண்ணாடித்தரை உள்ள படகில் போய்ப் பார்த்திருக்கேன், ஃபிஜித்தீவுகளில்.

    ReplyDelete
    Replies
    1. தெரியாதவங்கள தெரிஞ்சுக்கணும்ன்னு தானே நாம ஒண்ணு கூடுறோம். பவளப்பாறைகள டிவி ல பாத்ததோட சரி நான்

      Delete
  6. கல்லூரிக்குப் போகும் நேரத்தில், அவசர அவசரமாக நடத்திய - வகுப்பறை நிறைய தகவல்களைத் தந்தது.

    இன்றைய தொகுப்பும் - அவ்வாறே!.. இனிய தளங்களின் அறிமுகம்!..

    அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. ஹஹா... தேங்க்ஸ்.... மறக்காம எல்லார் தளத்துக்கும் போய் பாத்துடுங்க

      Delete
  7. இனிய அறிமுகங்கள்...
    பவளப்பாறை குறித்த பார்வை அருமை...
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி...

      Delete
  8. காயத்ரி என் பதிவை அறிமுகம் செய்ததற்கு ரொம்ப நன்றி .அதுவும் ஃப்ரான்ஸ் போய் வந்த
    அனுபவம் மிகச் சிறியபதிவு ஆனால் மிக ரசித்தது. தாங்க்ஸ்பா.

    ReplyDelete
    Replies
    1. ஆமா, அந்த பதிவு நல்லா இருந்துச்சு. தொடர்ந்து எழுதுங்க.... :) வாழ்த்துகள்

      Delete
  9. "முக்கியமா கடல் நீர மாசுபடுத்தாம இருந்தா போதும். அடுத்து, அழகுக்காக பவளப் பாறைகள தகர்த்து எடுத்துடுறாங்க. இதனால கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. ஏன், சுனாமி வந்தா நம்மால அலைய சமாளிக்க முடியாம ஏகப்பட்ட உயிரிழப்பு வேற நடந்து போகுது." என்ற கருத்தினூடாகச் சிந்திக்க வைக்கிறியளே!
    பாராட்டுகள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்க வைக்கணும் தானே.... பாராட்டுக்கு தேங்க்ஸ்

      Delete
  10. என்னுடைய வலைப்பூவை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி காயு :)

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் அண்ணா, இனி நிறைய பதிவு எழுதுங்க... வாழ்த்துகள்

      Delete
  11. பவளப்பாறை பற்றி...
    இனிய அறிமுகங்கள்...
    வாழ்த்துக்கள் காயு

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் :) வாழ்த்துக்கு

      Delete
  12. வணக்கம்
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறகடிக்கும் நினைவலைகள்-8:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா... கண்டிப்பா வர்றேன்...

      Delete
  13. அழகான அறிமுகங்கள் காயத்ரி. இதில் புதிதாக பார்க்க என இன்னும் வலைப்பூக்கள் இருக்கின்றன என் பார்வைக்கு. படித்து பார்க்கிறேன். மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா படிங்க... நன்றி

      Delete
  14. ஆம், இறைவன் நமக்கு வழங்கிய இயற்க்கை அனைத்தும் மனித நலனுக்கே, இதை மனிதன் முழுமையாக உணர்ந்து முடிக்கும் பொழுது உலகம் அழிந்து விடும் 6 அறிவு என்று சொல்லிக்கொள்ளும் அறியாமை மனிதர்களோடு....
    எனக்கு புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றியும், அவர்களுக்கு வாழ்த்துகளும்.

    - கில்லர்ஜி –
    ரெண்டு நாளைக்கு முன்னாலே திருமதி என்று தவறுதலாக எழுதியதற்காக தமிழ் மணம் 3

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்.... நீங்க விட மாட்டீங்க போலயே.... கள்ள ஓட்டுப் போட ஏற்பாடு பண்ணுங்க, ஓட்டு எண்ணிக்கை குறைவா இருக்கு

      Delete
  15. நன்றி:). அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிக்கு நன்றி

      Delete
  16. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு நன்றி

      Delete
  17. niraiya blogs arimugam seythulleergal! nanri!

    ReplyDelete
  18. சிறப்பான தளங்களின் அறிமுகங்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அறிமுகங்களின் வாழ்த்துக்கு என் சார்பா நன்றி

      Delete
  19. பவளப்பறை பற்றிய விளக்கம் அருமை.
    அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா... எல்லார் blog பக்கமும் போய் வாசிச்சு கமன்ட் போடுங்க

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது