07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 1, 2015

அங்கிங்கென்று அலைகிறான் கதைசொல்லியொருவன்.

நேற்றைக்கும் நேற்றைக்கு முதல்நாளுமாக இரண்டு நாளும் எழுதின வலைச்சரப் பதிவுகளை வாசித்து வாழ்த்துகளையும் அன்பையும் சொன்ன அத்தனை பேருக்கும்  மனப்பூர்வமான நன்றிகள்.
********************

 ஒரு உண்மையைச் சொல்லியாக வேண்டும். உங்கள் பின்னூட்டங்கள் அத்தனையும் வாசித்தேன். பாராட்டுகளையும்...எல்லாருக்குமே பதில் எழுதியிருக்க வேண்டும். ஆனால் நேரம் வாய்க்காமல் போகவே இன்றைக்கு எனது நன்றிகளை எழுதுகிறேன்.

அப்படியென்றால் நேற்றைக்குப் பின்னூட்டமிட்டுக்கொண்டிருந்தது யாரென்று நீங்கள் திகைக்கத் தேவையில்லை.  என்னைப் போலவே அத்தனைபேருக்கும்  பின்னூட்டமிட்டது நிச்சயமாய்  காயத்ரி தேவியின் கைங்கர்யம். யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொன்னதால் இப்போதுவரைக்கும் நான் அதுபற்றி உங்களிடம் மூச்சுவிடவில்லை. நீங்களும் எதையும் தெரிந்துகொள்ளவில்லை.
**************

கிழக்குக் கடற்கரைச் சாலையில் 654 கி.மீட்டர் பயணம்.  புதுச்சேரி, காரைக்கால், சிதம்பரம், சீர்காழி, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், கீழக்கரை வழியாக தூத்துக்குடி வர 13மணி நேரங்கள்.  நிறைய புகைப்படங்கள். அங்கங்கே சில பழைமையான கோயில்கள், கோயில்  சார்ந்த கதைகள். மனிதர்கள் என்று என் பயணத்தின் ஒவ்வொரு அங்குலமும் நினைத்தது போலே அனுபவங்கள் நிறைந்து அமைந்தது.

உங்களில் பலர் கி.ராஜநாராயணனின் ‘கோபல்லகிராமம் வாசித்திருக்கக் கூடும். மங்கத்தாயார் சொன்ன கதைகளாகத் தொடரும் கோபல்ல கிராமத்தில் கள்வனொருவனைக் கழுவிலேற்றும் முக்கியச் சம்பவம் நிகழுமல்லவா. அதில் வரும் கழுமரத்தினை போலான   நூற்றாண்டுகள் முன்பான கழுமரங்களை இராமநாதபுரம் மாவட்டமருகே உள்ள கரமைடையான் கோயிலில் கண்டடைந்தேன்.  கோபல்ல கிராமத்துக் கதையில் வரும் அதேச்சூழலை நேரில் பார்த்தது போல அமைந்தது கரமடையான் கோவில் பின்புறம் கல்மண்டபம் எழுப்பப்பட்டுள்ள வடக்கே நோக்கியுள்ள பெண் தெய்வச் சிற்பமும், அதன் எதிரே கிழக்கு நோக்கியுள்ள கழுவன் சிற்பமும்.

புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...


அபயமுத்திரைகள் இல்லாத பெண். காலத்தினால் தெய்வமாக வழிபடப்பட்டவள்

பிற்காலத்தில் எழுப்பப்பட்டுள்ள மண்டபம்.  விமானம் என்று ஏதுமில்லாததால் இதனை கோயிலாக மக்கள் கருதி இருக்க மாட்டார்கள்  முன்பு. 

பக்கவாட்டுத் தோற்றத்தில் கருவறையும் முன் மண்டபமும்

வன்னி மரத்தில் கடைந்து செய்யப்பட்ட கழுவேற்றி மரம். நூற்றாண்டுகள் பழமையானது. எத்தனை கலைநயம் பாருங்கள்

மூன்று கழுமரத்தில் முதல் இரண்டும் பழமையானது மற்றும் மரத்தால் செய்யப்பட்டது. மூன்றாவது மரம் மரக்குளவி குடைந்து தூர்ந்து போனதால் கல்லினால் மாற்று செய்து நிறுவி இருக்கிறார்கள். 


**************

சரி இன்றைக்கு அறிமுகம் செய்வதற்கான வலைதளப் பதிவர்கள் இரண்டுபேரை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். முதலில் முகநூலில் நீண்ட  உங்களில் பலருக்கும் நட்புப் பட்டியலில் இருக்க வாய்ப்புள்ள கிருத்திகா தரன் அவர்கள் வலைதளமான “ லகை ”  பற்றிய அறிமுகம்.  பலகையை வாசிக்கும் முன்னே கிருத்திகா தரன் அவர்களுடைய பதிவுகளில் முக்கியமான சிலவற்றினை வாசித்த அனுபவமுண்டு.

நம்மில் பலருக்கும் தயக்கங்கள் அதிகம். வங்கிக்குச் சென்றுவிட்டு செல்லானை நிரப்புவதற்கு முதலில் கொண்ட தயங்கம்.  முதல் முறை இணையதளம் பயன்படுத்தும்போது நமக்குள் எழும் தயக்கம். முதன்முதலாகப் பாராட்டைப் பெறும் போது நமக்குள் எழும் தயக்கம். இப்படி பல தயக்கங்கள் நமக்குள்ளே... அவற்றையெல்லாம்  நாம் யாரும் வெளியில் சொல்லப் போவதில்லை. .

அவற்றில் அயல்நாட்டில் கல்வி கற்க பிள்ளைகளை அனுப்பிவைக்கும் பெற்றோர்களுக்கு.. மாணவர்களுக்கென எழும் தயக்கங்களையும், பல அனுபவங்களையும், தகவல்களையும் திரட்டி எழுதத் தொடங்கிய பதிவுகளில் கவனம் ஈர்த்தவர். நிச்சயம் நீங்களும் வாசிக்கலாம். உங்கள் வீட்டில் கல்லூரிக்கு அதுவும் அயல்நாட்டுக்கு அனுப்பும் பிள்ளைகள் இருந்தால் நிச்சயம் வாசிக்கவேண்டிய வலை இவருடையது.

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என விளக்கும் பதிவுகளிவை:

ஐடி துறையைத் தேர்வு செய்யலாமா?



***************

மிகச் சிலருக்குத்தெரிந்திருக்கலாம் ஸ்ரீதேவி செல்வராஜன் வலையில் எழுதுகிறார் என்ற தகவலை. கனவுத் திருடி என்ற பெயரில் தன் மிகச்சில பதிவுகளை பதிந்து வைத்திருக்கிறார். நெல்லையப்பர் தேரோட்டத்தில் எதிர்பட்ட தூத்துக்குடி நண்பர் ஒருவர் நீங்கள் ஸ்ரீதேவி செல்வராஜன் நண்பர் தானே என்று அறிமுகமானார். நான் இல்லை அவங்க தம்பி என்றேன்.  தம்பியாக அக்காவின் எழுத்துகளை ஆஹா ஓஹோ என்று புகழலாம் தான். ஆனால் எனக்கு அது பழக்கமாகியிருக்கவில்லை.

ஆனால் கூர்ந்து கவனித்தால் இவரது எழுத்துகளில் பக்கத்துவீட்டுப் பெண்ணொருத்தி நம் வீட்டுக்கு வந்து பீடி சுற்றிக்கொண்டு ஊர்க்கதைகளை பேச்சுவாக்கில் அலுப்பில்லாமல் சொல்லிக் கொண்டிருப்பது போல அமைந்திருக்கும்.  அசலான ஊர்மொழி, வாஞ்சையான மனிதர்கள், இயல்பில் வெளிப்படும் கதாப்பாத்திரங்கள், பன்னெடுங்காலமாய் ஆண்களே எழுதும் பெண்களின் உணர்வுக் கதைகளை ஒரு பெண்ணே எழுதுவது இவரது பதிவுகளின்/  கதைகளின் ப்ளஸ்.   குழந்தைகளிலிருந்து பக்கத்து வீட்டுப் பாட்டி வரைக்கும் இவர் வாங்கும் பல்ப்கள் அதிரடி வகை.

கதைசொல்லியில் வெளியான இவரது சிறுகதையான  “கலியாவூரக்கா” பலதரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது. 


இவரின் பதிவுகளை நீங்களும் வாசித்துப் பார்க்க...

புன்னகை என்ன விலை
சிக்கன் கொத்து பரோட்டா
சுயமரியாதைப் பெண்கள்
வெட்டி ஞாயம்
ஆன்லைன் போராளி
டிராஃபிக் “ஆட்டோக்காரர்

***************************

மீண்டும் நாளை சந்திப்போம்....


8 comments:

  1. ஸ்ரீதேவி செல்வராஜன் அவர்களது கனவுத் திருடி
    புதிய வலைதளம். வாசிக்க வேண்டும்.

    பலகை பரிச்சயம்ஆன வலைதளம்.

    ReplyDelete
  2. இன்றைய இரு அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்...

    கைங்கர்யம் தொடரவும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. ஏறத்தாழ அடையாளம் காட்டப் படும் பதிவரின் எல்லா பதிவுகளையும் வாசிக்கச் சொல்கிறீர்கள் . பரவாயில்லை அவர்கள் மொத்தமாக எழுதிய பதிவுகளே சொற்பம்தானே, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பலகை கிருத்திகாதரன் தளம் சென்றுள்ளேன்! ஸ்ரீதேவி செல்வராஜன் தளம் சென்றதில்லை சென்று பார்க்கிறேன்! மிக்க நன்றி!

    ReplyDelete
  5. சிறப்பான தொகுப்பு ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இன்றைய இரு அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. கிருத்திகா வலைத்தளத்தில் எழுதுவதைவிட பேஸ்புக்கில்தான் அதிகம் எழுதுகிறார் அவர் பேஸ்புக் பிரபலம் அதனால் அவரது பேஸ்புக்கிற்கான முகவரி தந்து இருக்கலாம் ஒரு வேளை வலைச்சர விதிமுறைகள் இதற்கு இடம் கொடுக்காமல் இ இருந்திருக்கலாம் அதனால் என்ன நான் அந்த முகவரியை இங்கே தருகிறேன். https://www.facebook.com/kirthikat

    ReplyDelete
  8. இருவருமே எனக்கு புதியவர்கள். படிக்கிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது